கமிஷனர் ஆபீசில் வசூல் வேட்டை... நடுராத்திரியில் எப்.ஓ.பி., பசங்க சேட்டை

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | |
Advertisement
''இன்ஸ்பெக்டராக லேடி இருக்கிற ஸ்டேஷனிலே நியாயம் கிடைக்கலைன்னா, என்றால்,வேற எங்க கிடைக்க போகுது,'' என்று மொபைல் போனில் புலம்பியபடி, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா, உள்ளே வர்றப்பவே ஒரே புலம்பல்ஸ்,''''அட... மித்து. மங்கலம் பக்கத்தில, 14 வயதே ஆன, பள்ளி மாணவியை, தறிக்குடோனில் வேலை செய்கிற வாலிபர், கல்யாண ஆசை கூறி அழைத்து சென்றார். இதற்கு, அந்
கமிஷனர் ஆபீசில் வசூல் வேட்டை... நடுராத்திரியில் எப்.ஓ.பி., பசங்க சேட்டை

''இன்ஸ்பெக்டராக லேடி இருக்கிற ஸ்டேஷனிலே நியாயம் கிடைக்கலைன்னா, என்றால்,வேற எங்க கிடைக்க போகுது,'' என்று மொபைல் போனில் புலம்பியபடி, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா, உள்ளே வர்றப்பவே ஒரே புலம்பல்ஸ்,''

''அட... மித்து. மங்கலம் பக்கத்தில, 14 வயதே ஆன, பள்ளி மாணவியை, தறிக்குடோனில் வேலை செய்கிற வாலிபர், கல்யாண ஆசை கூறி அழைத்து சென்றார். இதற்கு, அந் தறிக்குடோன் ஓனரே உடந்தையாக இருந்து, இருவருக்கும், கலயாணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சாராம்,''

''இதை தெரிஞ்சுகிட்ட, சிறுமியின் பேரன்ட்ஸ், போலீசில் கம்ளைன்ட் கொடுத்தனர். வழக்கம்போல, போலீசார் அலட்சியம் காட்டி, பேரன்ட்ைஸ அலைக்கழிச்சாங்க. ஒரு வழியாக, இந்து அமைப்பை சேர்ந்த ஒரு நிர்வாகி மூலமாக, மாணவி மீட்கப்பட்டார்,''

''சம்பவம் தொடர்பா, சி.எஸ்.ஆர்., கூட போடுலையாம். பேரன்ட்ஸை பயப்பட வச்சு, வாலிபரையும் தப்பிக்க வைச்சிட்டாங்க. தறி ஓனரையும் காப்பாத்திட்டாங்க,''

''ஏக்கா... லேடி ஆபீசர் இருக்கற அந்த ஸ்டேஷனிலேயே, ஒரு பெண்ணுக்கு நியாயம் கிடைக்கலைன்னா, என்னத்தை சொல்றது,'' என, ஆதங்கப்பட்ட மித்ரா, ''எஸ்.ஐ.,க்கும், இன்ஸ்.,க்கும் ஏற்பட்ட பனிப்போரில், சிக்கிகிட்ட ஏ.ஆர். போலீஸ் கதை பரிதாபமாக இருக்கு,''என்றாள்.''யாரு மித்து, அந்த இன்ஸ்.,''

''சமீபத்தில், ஏ.ஆர்., போலீஸ்காரங்க சிலர், 'பாத்திர பட்டறை' ஊருக்கு பக்கத்திலுள்ள '...பாைளயம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'பீட்' பார்த்திருக்காங்க. அப்ப, ராத்திரி நேரத்தில் ஏ.ஆர்., போலீஸ்காரர் ஒருவர், ஒரு நபரிடம் பேசி கொண்டிருந்தார். இதை அவ்வழியே வந்த, ஏ.ஆர்., எஸ்.ஐ., ஒருத்தர் பார்த்துட்டு, 'டியூட்டி நேரத்தில், இப்படி பேசக்கூடாது,'' என அட்வைஸ் செய்தார்.

''இதைப்பார்த்த ஒரு போலீஸ்காரர், இன்ஸி.,டம் சொல்ல, அவர் எதையும் விசாரிக்காமல், ஏ.ஆர். எஸ்.ஐ.,யை சத்தம் போட்டார். இதுசம்பந்தமாக, ஏ.ஆர்., போலீசிடம் எழுதி வாங்கி, கமிஷனரிடம் கொடுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.

''ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மற்றும் ஏ.ஆர்., எஸ்.ஐ.,க்குள் ஏற்பட்ட, பனிப்போரில், ஏ.ஆர்., போலீஸ் சிக்கிட்டு, தவியாய் தவிக்கிறாரு,'' என்று விளக்கினாள் மித்ரா.''சில நேரங்களில் சிலர் சிக்கிக்கிறாங்க.

அதைவிட இந்த கொடுமையை கேளு மித்து,''''என்னக்கா கொடுமை?'' சிரித்தபடியே கேட்டாள் மித்ரா.

'பழைய பஸ் ஸ்டாண்டுக்குள், நம்ம 'சவுத்' போலீஸ்காரங்க, 'வெகிள் செக்கப்' என்ற பேரில், எஸ்.ஐ., தலைமையில் ராத்திரி நேரத்தில் போற, வரவங்களை பிடிச்சு 'மேட்டர்' கலெக்ஷன் பண்றாங்க,''''அதே ரோட்டில் கொஞ்சம் தள்ளி, எப்.ஓ.பி., பசங்க நின்னுக்கிட்டு, குச்சியை வண்டி சக்கரத்துகிட்ட வச்சு, நிறுத்தி பிடிக்கிறாங்க. நம்ம ஊர்க்காரங்களை பிடிச்சா வம்பாயிடுமுன்னு, வடமாநில தொழிலாளரை பிடிச்சு கறந்திடறாங்க.

இப்படி, ஒரே இடத்தில், ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிற மாதிரி, செம கலெக்ஷன் பண்றாங்க,'' என்றாள் சித்ரா.''இவுங்க வெளியில பண்ணறாங்க. ஒருத்தரு உள்ளே பண்றாரு,''ஆரம்பித்தாள் மித்ரா.

''யாருடி அது?'' ஆர்வமாக கேட்டாள் சித்ரா.,''அக்கா... பூலுவப்பட்டியிலுள்ள போலீஸ் ஆபீசில், ரெண்டு பேர், புரமோஷன் லிஸ்ட் தயாரிப்பதில் ஆரம்பித்து, 'எலக் ஷன் டி.ஏ.,'பில் என, எல்லா பில்களிலும், வைட்டமின் 'ப' கறந்திடறாராம். அதிலும், லீவு சரண்டர் செஞ்சவங்களுக்கு சம்பளத்தையும் 'பாஸ்' பண்ண மாட்டேங்கிறார்,''''ஏண்டி... உயரதிகாரி ஆபீசிலேயே இப்டி வசூல்வேட்டை நடக்குதுன்னா... ஆபீஸருக்கு தெரியாம இருக்கு.

அவருதான்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கோணும்,''''அவர் காதுக்கு போற மாதிரி சொல்லியாச்சு. பொறுத்திருந்து பார்க்கலாம், என்ன பண்றாரு,''அப்போது, மித்ராவின் அம்மா, டீ கொண்டு வரவே, ''அடடா... நானே கேக்கலாமுன்னு இருந்தேன். நீங்களே கொண்டு வந்துட்டீங்க. தேங்க்யூ ஆன்ட்டி,'' என்ற சித்ரா, டீயை பருக ஆரம்பித்தாள்.

குடிநீர் பிரச்னைக்காக, தி.மு.க., வினர் ஆர்ப்பாட்ட செய்தி 'டிவி'யில் ஒளிர்ந்தது. அதைப்பார்த்த மித்ரா, ''திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாஜி மினிஸ்டர் பாதியில் கிளம்பிட்டாராமே, என்ன விசயங்க்கா?''''வேறென்ன, கோஷ்டி கானம்தான். இதுதவிர கூட்டமும் ரொம்ப கம்மியாம். வந்த கொஞ்சம் பேரும், பேக்கரிக்கும் போய்ட்டாங்கள். இதைப்பார்த்துட்டு, நிர்வாகி ஒருத்தர், மைக்கில் பலமுறை கூப்பிட்டும், யாரும் வரலையாம். இதை பார்த்துட்டே இருந்த, 'மாஜி' அமைச்சர் தனது பேச்சை, ஓரிரு நிமிஷத்தில முடிச்சிட்டு, கோவத்துல, கிளம்பிட்டாராம்,''

''எலக்ஷன் மீட்டிங் போல, காசு கொடுத்துதான், போராட்டத்துக்கும் ஆட்களை கூட்டிட்டு வரோணும் போல,'ன்னு, கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்களாம்,''

''என்ன கொடுமை சரவணன் சார்?''என சந்திரமுகி வசனம் போல சொல்லி சிரித்தாள் மித்ரா.அறைக்குள் வந்த மித்ராவின் அம்மா, ''மித்து. நான் கடைவீதி வரைக்கும் போயிட்டு, வந்திடறேன். நீ... இந்த மாச வரவு செலவு கணக்கை எழுதி வை,'' என்றவாறே, கிளம்பினார்.

''செலவு கணக்கு பார்க்க முடியாம, அதிகாரிங்க திணறிட்டாங்களாம். நீ எப்படிடி,'' கிண்டலாக கேட்டாள் சித்ரா.''அக்கா.. ஏதோ, எனக்கு தெரிஞ்சமாதிரி பார்ப்பேன். ஆமா... நீங்க எந்த கணக்கை சொல்றீங்க?''''அட, எலக்ஷன் செலவு கணக்கைதான் சொல்றேன். சுயேச்சை வேட்பாளர் போலவே, நிறைய வேட்பாளர் செலவு செஞ்சிருந்தாங்க; சிலர் பிரசாரத்துக்கு கூட தொகுதி முழுவதும் போகவே இல்லை. அதனால, ரொம்ப 'ஈஸியா' எலக்ஷன் செலவு கணக்கு தாக்கல் பண்ணிட்டாங்க''

''குறிப்பா, அ.தி.மு.க., வேட்பாளர் செலவு கணக்க பார்க்க முடியாம, கணக்கு அதிகாரிங்க கதிகலங்கி போயிட்டாங்களாம். பிரதமர், முதல்வர், துணை முதல்வர் வந்துட்டுப்போனது, என, எல்லா பிரசார செலவையும், வேட்பாளர் கணக்குல ஏத்திட்டாங்க''''ஏகப்பட்ட கணக்கு எழுதி வச்சதால, வேட்பாளர் கொடுத்த செலவு கணக்கிற்கும், அதிகாரிங்களின் நிழல் கணக்கிற்கும் ஏகப்பட்ட வித்யாசமாம்.

அதற்கு பிறகு வேட்பாளர் தரப்புல அறிக்கை வாங்கி, கணக்கு தாக்கல் செய்றதுக்குள்ள, ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்களாம் அதிகாரிங்க''''ஓ... அப்படிங்களா?'' என கேட்ட மித்ரா, ''இந்த வீடியோகிராபர் விவகாரம் முடியவே இல்லைனு பேசிக்கறாங்களே உண்மைங்களா?'' என்றாள்.''அதுவும் உண்மைதான்டி.

வீடியோ கிராபர்களுக்கு சம்பளம் கணக்கு முடிக்கறதுல சிக்கலா போச்சு''''வேலை வாங்கிட்டாங்க; கடைசியில பார்த்தா, பாதி மட்டும் தான் கொடுக்க முடியும்னு சொல்லியிருக்காங்க. அதனால டிரைவருங்க, கலெக்டர் வரைக்கும் இந்த பிரச்னையை கொண்டு போயிருக்காங்க''

''ஓ அப்படியா? அதே மாதிரி, லைட்டு மாட்டலைனா, பணத்த வேற மாவட்டத்துக்கு ஒதுக்கிடுவோம்னு, சென்னையில இருந்து மிரட்டராங்களாம் மித்து''''அப்டியா... என்ன விஷயங்க்கா?''''திருப்பூர் யூனியன்ல இருக்கற, நான்கு பஞ்சாயத்துக்கு, 11 'ைஹமாஸ்' லைட் மாட்டறதுக்கு, எம்.பி., நவநீதகிருஷ்ணன் கிட்ட, 99 லட்சம் நிதி கேட்டு, மக்களே அனுமதி வாங்கிட்டாங்க.

11 இடத்துல 'லைட்' கம்பம் அமைக்க, ., நிதி ஒதுக்கியும், கலெக்டர் அனுமதி கொடுக்காம வச்சிருக்காராம்''''மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலயும், 'ைஹமாஸ்' லைட் போடறதுக்கு ரெடியாத்தான் இருக்காங்க. 'மின் கட்டணம் அதிகமா வந்தா, பஞ்சாயத்துல தாங்க முடியாதுனு, கலெக்டர் தான் அனுமதி கொடுக்கலை,'''' இப்படியே இருந்தா, வேற மாவட்டத்துக்கு நிதியை மாத்திடறோம்னு, எம்.பி., ஆபீசுல இருந்து மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். அதான், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போயிருமோனு, மக்கள் புலம்பறாங்களாம்,''

''மக்களுக்கு பயனளிக்கிற இந்த விஷயத்தில, கலெக்டர் சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவெடுக்க வேண்டாமா?'' என்றாள் மித்ரா. ''சரி மித்து, மழை வர்றதுக்குள்ளே கிளம்பறேன்,'' என ெஹல்மெட்டுடன் புறப்பட்டாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X