'கதாநாயகன் மோடி': அமைச்சர் சாரங்கியின் அதிரடி பேச்சு

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, பிரதமர் மோடி உருவானார் என பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய இணையமைச்சருமான, பிரதாப் சாரங்கி பேசினார்.






லோக்சபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை துவக்கி வைத்து, ஹிந்தி, சமஸ்கிருதம், ஒரியா, ஆங்கிலம், பெங்காலி மொழிகளில், அவர் பேசியதாவது: பாகிஸ்தானின் பாலகோட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது நம் விமானப்படை தாக்குதல் நடத்தியதற்க்கு ஆதாரம் கேட்டவர்களின் செயல், தாயின், டி.என்.ஏ., மூலக்கூறுக்கு ஆதாரம் கேட்பது போன்றது. 'வந்தே மாதரம்' என, சொல்ல தயங்குபவர்கள், இந்த நாட்டில் வசிக்க தகுதியற்றவர்கள்.





எதிர்க்கட்சிகள் வில்லன்களாக விளங்கியதால் தான், கதாநாயகன் போல, பிரதமர் மோடி உருவானார்.அவரின் ஆட்சியால், வெளிநாடுகளில் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது. பாலகோட் தாக்குதலை நடத்த முடிகிறது. பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட, 'விங் கமாண்டர்' அபிநந்தனை உடனடியாக விடுவிக்க முடிகிறது. இந்த அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும். இல்லையேல், மக்கள் என்ன செய்வர் என்பது தான் தெரியுமே!





முன்னர் செய்த ஒரு தவறால், இந்த நாடு பிளவுபட்டது. அந்த தவறு, இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அவரின் பேச்சை, பிரதமர் மோடி, சிறிது நேரம் ரசித்து கேட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜூன்-201912:56:56 IST Report Abuse
Malick Raja ஒரு நாட்டில் வசிக்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை .. சொல்வதை சொன்னால்தான் இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு எந்த அங்கீகாரமும் இல்லை.. ஒரு சத்திய வாக்கு சொல்லி பதவி ஏற்றவர் சொல்வது மனிதஅமைப்புக்கே அப்பாற்பட்டது.. சுதந்திரம் அடைந்தது, கிடைத்தது எப்படி என்று விளங்காத அறிவிலிகள் அறியாமை பிதற்றுவது அறியாமை .. மனிதபண்பற்ற நிலைகளை அவரவர் திருத்திக்கொள்வதே மனித மாண்பு ..
Rate this:
Share this comment
Cancel
25-ஜூன்-201914:07:20 IST Report Abuse
சவ்கிதார் நாய்க்குட்டி இன்று முதல் எல்லோரும் சவ்கிதாரை தூக்கிவிட்டு கதாநாயகன் என்று வைத்து கொள்ளலாம் வாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
25-ஜூன்-201913:19:13 IST Report Abuse
Kannan அப்போ, நம்ம பப்பு ஒரு கோமாளியா? மம்தா ஒரு வில்லி. சந்திரா பாபு ஒரு வில்லன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X