12 கவர்னர்கள் மாற்றம்: மத்திய அரசு தீவிரம்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: பல்வேறு மாநில கவர்னர்களின் பதவிக்காலம் முடிவடைவதாலும் சில மாநிலங்களில் நிரந்தர கவர்னர் இல்லாததாலும் 12 மாநிலங்களில் புதிய கவர்னர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசியல் சாசனத்தின்படி ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாநில கவர்னர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் கொண்டது இந்தப் பதவிக் காலம். அதன்பிறகு கவர்னரை மாற்றுவது அல்லது அவரே தொடர்வதை ஜனாதிபதி முடிவு செய்வார். வழக்கமாக மத்தியில் ஆளும் கட்சி தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கவர்னர் பதவியை அளிக்கும். அதன்படி கடந்த 2014ல் பா.ஜ. தலைமையிலான அரசு அமைந்த பிறகு பல மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றப்பட்டனர். மேற்கு வங்கம் உத்தர பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத் போன்ற மாநில கவர்னர்கள் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் அவர்கள் மாற்றப்பட உள்ளனர்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது: தற்போது 12 மாநிலங்களின் கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து உள்துறை அமைச்சரும் பா.ஜ. தலைவருமான அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து அவர் இறுதிப் பட்டியலை தயாரிப்பார். பல மாநில கவர்னர்களின் பதவிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடைய உள்ளது. அதனால் பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிவடைவதற்குள் புதிய கவர்னர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

குஜராத் கவர்னர் ஓ.பி. கோலியின் பதவிக் காலம் ஜூலை 16ல் முடிவடைகிறது. நாகாலாந்து கவர்னர் பி.பி. ஆச்சாரியா பதவிக் காலம் ஜூலை 18ல் முடிகிறது. இவர்களைத் தவிர உத்தர பிரதேச கவர்னர் ராம் நாயக் ஜூலை 21; மேற்கு வங்க கவர்னர் கேசரி நாத் திரிபாதி ஜூலை 23; திரிபுரா கவர்னர் கப்டான் சிங் சோலங்கி ஜூலை 26ல் பதவிக்காலம் முடிகிறது.

இவர்களில் திரிபாதி மேற்கு வங்க கவர்னராக தொடருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். மற்றும் பா.ஜ. இடையே பலத்த அரசியல் போட்டி நடப்பதால் திரிபாதி தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்டிரா கவர்னர் சி. வித்யாசாகர் ராவ் ஆக. 29; கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா ஆக. 30; கர்நாடகா கவர்னர் வாஜுபாய் வாலா ஆக. 31ல் பதவிக் காலம் முடிகிறது. அதனால் இங்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய பிரதேச கவர்னர் ஆனந்தி பென் படேல் சத்தீஸ்கரை கூடுதலாக கவனிக்கிறார். அதனால் சத்தீஸ்கருக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளார்.

ஐ.பி. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரான இ.எஸ்.எல். நரசிம்மன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் கவர்னராக உள்ளார். இவற்றில் ஏதாவது ஒன்றில் அவர் தொடருவார். மற்றொரு மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படுவார். முந்தைய காங். அரசு நியமித்தவர்களில் தற்போதும் கவர்னராக இவர் மட்டுமே உள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான கேரள கவர்னர் பி. சதாசிவம் மற்றும் ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கின் பதவிக் காலம் செப்.ல் முடிவடைகிறது. அதனால் இவற்றுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். லோக்சபா தேர்தலில் கேரளாவில் இருந்து போட்டியிட்ட கும்மனம் ராஜசேகரன் ராஜிநாமா செய்ததால் மிஜோரமுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
25-ஜூன்-201912:21:31 IST Report Abuse
Poongavoor Raghupathy Kiran Bedi is an ideal Governor for Tamilnadu to screw up DMK who are thinking that DMK is the owner of Tamilnadu State.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
25-ஜூன்-201911:24:54 IST Report Abuse
Narayan நம்ம பொன் ராதா அவர்களுக்கு கொடுங்க ப்ளீஸ். தங்கமான மனிதரை அநியாயமா தோற்கடிச்சுட்டோம்.
Rate this:
Share this comment
Cancel
25-ஜூன்-201909:47:46 IST Report Abuse
ஆப்பு இருக்குற முதியவர்களுக்கு கட்டாய ஓய்வு குடுத்துட்டு புதிய இளம் முதியவர்களை கெவுனர்களாப் போடுங்க...குறைந்த பட்சம் அறிக்கையாவது குடுக்கணும், அரசு விழாக்களில் கலந்துக்கணும், சினிமா விருதுகள் குடுக்கணும்..இது கூட முடியலேன்னா எப்பிடி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X