புதுடில்லி: 'தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து லோக்சபாவில் நேற்று(ஜூன் 25) கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் கூறியதாவது: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் பெற்று வேண்டுமென்றே அதை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, 2014 - 15ல் 5,349 ஆக இருந்தது. இது 2019 மார்ச்சில் 8,582 ஆக உயர்ந்துள்ளது. இது 60 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கியது ரூ.12,260 கோடி:
மேலும் லோக்சபாவில், கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் தெரிவித்ததாவது: கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் கணக்கில் காட்டாத 12 ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானம் தொடர்பாக 380 வழக்குகளில் வருமான வரித்துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதில் 68 வழக்குகளில் சட்ட நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 983 குழுமங்களில் நடந்த சோதனையின் போது கணக்கில் காட்டாத 1584 கோடி ரூபாய் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE