'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (24)
Advertisement

லண்டன்: 'இந்தியாவுடனான நம் உறவு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கியுள்ளது. வெளியுறவு கொள்கை தொடர்பான விஷயங்களை மறு ஆய்வு செய்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என பிரிட்டன் பார்லிமென்ட் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பார்லிமென்ட் தேர்வுக் குழு இந்தியாவுடனான வர்த்தக மற்றும் அரசியல் உறவு தொடர்பான அறிக்கையை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுடன் நம் நாடு வர்த்தக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக இந்தியாவுடனான நம் உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.





கடந்த 1998 - 99ல் இந்தியாவுடன் அதிகமாக வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போது 17வது இடத்துக்கு பின் தங்கி விட்டோம். அதேநேரத்தில் மற்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைத்துள்ளன. 'பிரக்சிட்' விவகாரத்துக்கு பின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட குளறுபடி இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்திய சுற்றுலா பயணியர், மாணவர்கள், தொழில் நிபுணர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கான 'விசா' அளிப்பது மற்றும் குடியேற்ற கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; இதை தளர்த்த வேண்டும்.





இந்தியர்களுக்கு 'விசா' அளிப்பது மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான விஷயங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியர்கள் எளிதாக பிரிட்டன் வந்து செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201918:04:24 IST Report Abuse
Maha 400 ஆண்டிகளுக்கு முன்பு வந்தான் பிரிட்டிஸ்காரன். ஆண்டான், அடிமைப்படுத்தினான் நமது மண்ணிலே. அவன் வியாபாரத்துக்கு, ரயில் லைன் போட்டான். அள்ளிக்கொண்டு போனான்- தங்கம், மூலப்பொருட்கள், வைரங்களை… அவன் நாட்டில் உற்பத்தி செய்தான், உலகெங்கும் விற்றான், செல்வந்தன் ஆனான்...40 கோடி, மக்கள் தொகை ஆனதும், நம்மை பஞ்ச பராரிகள் ஆகவிட்டு சென்றான். நாம் அங்கு சென்றால் விசா கேட்கிறான். ஆயிரத்து எட்டு கேள்விகள் கேட்கிறான், ஏன் என்றால், அவன் செல்வந்த முன்னேறிய நாடு…யார் கொடுத்தது அதிகாரம் அவனுக்கு, அதுதான் நாட்டில் சென்று, அனுமதி இல்லாமல் அள்ளி செல்வதற்கு...அதற்கு பெயர் திருட்டு…இப்போது, அவன் நாட்டுக்கு சுற்றுலா, செய்வது என்றல் கூட, நீ என்ன சொத்து வைத்திருக்கிறாய், ஆயிரத்து எட்டு டாக்குமெண்ட் கொடு...என்கிறான்….என்ன கொடுமை சார் இது..….
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
25-ஜூன்-201917:55:11 IST Report Abuse
Subramanian Arunachalam பிரிட்டன் தீவிரவாதிகளுக்கும் , மற்றும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பும் கொடுக்கிறது . பிரிட்டன் மற்றும் ஓர் பாக்கிஸ்தான் . சாத்தான் வேதம் ஓதுவது போல் ஊருக்கு உபதேசம் செய்யும் . நம் நாட்டை ஏமாற்றிய பிறகு அயோக்கியர்கள் செல்லும் இடம் பிரிட்டன் . பாகிஸ்தானை ஒதுக்குவதுபோல் பிரிட்டனையும் நம் நாடு ஒதுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
25-ஜூன்-201913:47:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தியாவிலிருந்து தப்பி வரும் திருடர்களை பாதுகாப்பதை தவிர உருப்படியாக வேறேதும் செய்தது உண்டா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X