பொது செய்தி

தமிழ்நாடு

பி.இ., கவுன்சிலிங் இன்று துவங்கியது

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று(ஜூன் 25) துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தாங்கள் படிக்க விரும்பும் கல்லுாரிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
1.73 லட்சம் இடங்கள் :


பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக உயர் கல்வித்துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.03 லட்சம் பேர், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 1.73 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளன.


மாற்று திறனாளிகள் :


இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்பிற்கான நேரடி ஒற்றை சாளர கவுன்சிலிங், இன்று துவங்கியது. இன்று, மாற்று திறனாளிகளுக்கும், நாளை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், நேரடி கவுன்சிலிங் நடக்கிறது. நாளை மறுநாள் விளையாட்டு பிரிவுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.ஜூலை 3 ஆன்லைன் கவுன்சிங் :


நாளை முதல், 28ம் தேதி வரை, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப் பாடப் பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 3ல், 'ஆன்லைன்' கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும், கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களை, tneaonline.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELVAKUMAR - chennai,இந்தியா
25-ஜூன்-201921:43:52 IST Report Abuse
SELVAKUMAR திறமையான மாணவர்களுக்கு சிறந்த தொழில் நுட்ப கல்லூரிகளில் இடம் கிடைக்க வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
25-ஜூன்-201916:16:39 IST Report Abuse
kalyanasundaram with the present level of education it will not be possible for indian students to get decent profession. standards must be increased and deserving must be encouraged than to go in for reservations.
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
25-ஜூன்-201915:05:58 IST Report Abuse
VELAN S சீமான் சொன்னா மாதிரி பேசாம அரசே ஆடு மாடு கோழி வளர்ப்பு திட்டம் கொண்டுவந்து எல்லா இளைஞர்களுக்கும் அரசு வேலை கொடுப்பது நல்லது , இயற்கை வளம் பெருகும் , எஸ்ப்போர்ட் அதிகரிக்கும் , பசி பட்டினி குறையும் , வேலையில்லாத்திண்டாட்டமும் குறையும் . அல்லாமா , இப்ப உள்ள இன்ஜினீரிங் கோர்ஸ் படிச்சா வேலையில்லாத்திண்டாட்டம் பெருகி கொலை கொள்ளை நாட்டில் ஆறாக ஓடும் , எது வேண்டும் என்று அரசு முடிவு செய்ய வேண்டும் . வாழ்க தமிழகம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X