கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜோதிமணி, செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
குற்றவியல் கோர்ட், கரூர், செந்தில்பாலாஜி, ஜோதிமணி

கரூர் : லோக்சபா தேர்தலின் போது மாவட்ட கலெக்டர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி.,ஜோதிமணி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி ஆகியோர் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 25) ஆஜராகினர்.
ஜோதிமணியின் முகவர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிப்பதற்காக அவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் சென்றதாக கூறினார். ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தன்னை வீடு புகுந்து மிரட்டியதாக கலெக்டர் அன்பழகன் புகார் அளித்தார்.
கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார். அதன் பேரில் செந்தில்பாலாஜி, ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார், அவருடன் சென்ற 50 பேர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில் குமார் ஆகியோ கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகார்த்தி முன்பு இன்று (ஜூன் 25) ஆஜராகினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-ஜூன்-201903:23:10 IST Report Abuse
Cheran Perumal தப்பான கட்சியில் இருந்தால் தப்பான செயல்தான் செய்யத் தோன்றும்.
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
25-ஜூன்-201918:58:52 IST Report Abuse
Rajan மிரட்டும் காவல் ,
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஜூன்-201917:51:13 IST Report Abuse
Endrum Indian ஆனால் இந்த ஜோதிமணி மிக மிக நல்ல பெண் , எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் , நன்னடத்தை உள்ளவர் என்று கொஞ்ச நாள் முன்பு இதே பேப்பரில் வந்ததே???அப்போ எல்லாம் டுபுக்கு கேஸ் தானா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X