கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
விளம்பர பேனர், ஐகோர்ட், அதிருப்தி, டிராபிக் ராமசாமி

சென்னை : சட்டவிரோதமாக அமைக்கப்படும் விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றியது குறித்து அறிக்கை அளிக்க அரசு அவகாசம் கோரியது. இதனால், ஐகோர்ட் நீதிபதி அதிருப்தியடைந்து எச்சரித்தார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பேனர்களை அகற்றுவது சம்பந்தமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேனர்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ''இந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது. அரசின் செயல்பாடுகளால் வழக்கு தொடர்ந்த மனுதாரரிடமே நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. நாளை இதுகுறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
சாதாரண மனிதர்கள் தவறு செய்யும் போது தண்டனை வாங்கித் தரும் அரசு, அரசியல்வாதிகள் என்றால் ஏன் அதைச் செய்யவில்லை. இதேபோன்று அரசின் நடவடிக்கை தொடர்ந்தால், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடவேண்டியிருக்கும்,'' என்றும் எச்சரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-201919:30:35 IST Report Abuse
ஆப்பு போதும்...நிறுத்திக் கொள்ளுங்கள். இதுக்கு மேலே அரசை குறை கூறாமல், ஜனாதிபதியிடம் புகார் குடுத்துப் பாருங்கள். அவர் மனசு வெச்சு இவிங்களை தூக்கினால் உண்டு.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஜூன்-201917:46:12 IST Report Abuse
Endrum Indian ஐகோர்ட் அதிருப்தி??? உன்னாலே ஒண்ணும் பண்ணமுடியாது கோர்ட்டே???தீர்ப்பு இப்படி சொல்லித்தான் பாரேன்???? அந்த கட்சி அல்லது ரசிகர் மன்றங்களுக்கு இந்த கட் அவுட்/ விளம்பர பிளெக்ஸ் போர்டு ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்தார்களோ அதற்கு 10 மடங்கு அபராதம் என்று போட்டு அரசு கருவூலத்தில் கட்டவேண்டும் என்று போட்டால் டாஸ்மாக் நாட்டுலே வருமானம் நல்லா நடக்குமே????
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
25-ஜூன்-201916:37:59 IST Report Abuse
Gnanam அதிருப்தி தரும் மற்றுமொரு செயல் என்னவென்றால், சுவரொட்டி விளம்பர பிரசுரங்களை சாலையோர வழிகாட்டி பலகைகளில் ஒட்டிவிடுகிறார்கள் சிலர். வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட நேரிடுகிறது. ஒழுங்குமுறையில் கண்டிக்கவேண்டிய செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X