விளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விளம்பர பேனர்கள் ; ஐகோர்ட் அதிருப்தி

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (3)
விளம்பர பேனர், ஐகோர்ட், அதிருப்தி, டிராபிக் ராமசாமி

சென்னை : சட்டவிரோதமாக அமைக்கப்படும் விளம்பர பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றியது குறித்து அறிக்கை அளிக்க அரசு அவகாசம் கோரியது. இதனால், ஐகோர்ட் நீதிபதி அதிருப்தியடைந்து எச்சரித்தார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பேனர்களை அகற்றுவது சம்பந்தமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேனர்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ''இந்த வழக்கில் அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது. அரசின் செயல்பாடுகளால் வழக்கு தொடர்ந்த மனுதாரரிடமே நீதிமன்றம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கிறது. நாளை இதுகுறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
சாதாரண மனிதர்கள் தவறு செய்யும் போது தண்டனை வாங்கித் தரும் அரசு, அரசியல்வாதிகள் என்றால் ஏன் அதைச் செய்யவில்லை. இதேபோன்று அரசின் நடவடிக்கை தொடர்ந்தால், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடவேண்டியிருக்கும்,'' என்றும் எச்சரித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X