ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்.,: மோடி

Updated : ஜூன் 25, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி: புதிய அரசு பொறுப்பேற்ற பின் துவங்கிய பார்லி., கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று (25 ம் தேதி ) உரையாற்றினார். அப்போது, ஏழைகளின் முன்னேற்றமே நோக்கம் என்றார் மோடி.


உரையில் மோடி கூறியதாவது:


சிறப்பான ஆட்சிக்கு மக்கள் தீர்ப்பு


ஜனாதிபதி நமது அரசின் நோக்கம், திட்டம், ஆகியன குறித்து விளக்கமாக கூறியுள்ளார். மக்களின் எண்ணங்களை ஜனாதிபதி தனது உரையில் தெளிவுப்படுத்தியுள்ளார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
புதிய இந்தியாவை ,புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம். எங்களின் அரசை மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளமைக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகால சிறப்பான ஆட்சிக்கு நாட்டு மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெறுவதைவிட வேறு பெரிய வெற்றி இல்லை. இந்திய மக்கள் தங்களை விட தேசியத்தை விரும்புகின்றனர். மக்கள் தற்போது எதிர்கால இந்தியாவுக்கு ஓட்டளித்துள்ளனர். வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம்.


எரிவாயு, கழிப்பறை, மின்சாரம்


2014 ல் நான் கூறினேன் ஏழை மக்களுக்கு அரசு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றேன். கூறிய வாக்குறுதியை நிறைவேற்றினேன். எனது அரசு எப்போதும் ஏழை மக்களுக்காகவே பணியாற்றும். மக்களுக்கு தேவையான திட்டங்களை விவாதித்து நிறைவேற்றுவோம்.
சாதாரண மனிதனின் உரிமை காக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் அரசின் விருப்பம். நாங்கள் எதையும் திசை திருப்பவோ, நீர்த்து போக செய்யவோ இல்லை. சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம் வழங்கியது மக்கள் சிந்தினையை தொட்டது.
விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். எதிர்கட்சியினர் விவாதங்களும் மதிக்கப்படும். இந்த அவைக்கு வந்துள்ள அனைத்து எதிர்கட்சியினரையும் வரவேற்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவருக்கும் ஒற்றுமை மிக அவசியம்.
காங்கிரஸ் அரசு உண்மை நிலையில் இருந்து விலகி இருந்தது. இந்த அரசு சிறப்பானதாக செயல்படுகிறது. நாங்கள் எந்த சாதனைகளையும் எதிர்ப்பது இல்லை. காங்கிரஸ் மற்றவர்களின் சிறந்த பணியை அங்கீகரிப்பதில்லை. கடந்த கால பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன்சிங்கை கூட காங்கிரஸ் உரிய மரியாதை அளிக்கவில்லை. நாங்கள் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கினோம்.


ஜனநாயகத்தை சிறை வைத்த காங்.,


காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்ஸியால் ஜனநாயகம் பாதிப்புக்குள்ளானது. ஜனநாயகம் சிறை வைக்கப்பட்டது. பத்திரிகைகள் முடக்கப்பட்டன. அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த பாவங்களை யாரும் மறக்க முடியாது. இந்திய ஆத்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் எமர்ஜென்ஸி. சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தி, போன்ற பலரை நாம் மறக்க கூடாது.
சாதாரண மனிதர்கள் மனதில் காந்தி இடம் பிடித்தார். இது போன்ற உணர்வு நம் அனைவருக்கும் வர வேண்டும். காந்தியின் கனவை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் தண்ணீர் என்பது எங்களின் மந்திரம். தற்போது அனைவருக்கும் தண்ணீர், மின்சாரம் கிடைத்துள்ளது. தண்ணீரை காத்திட அனைத்து எம்பிக்களும் உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
25-ஜூன்-201921:27:09 IST Report Abuse
A.Gomathinayagam அவர்கள் சரி இல்லை என்று தான் மாற்று அரசை தேர்வு செய்து உள்ளனர். இனி ஆக்க பூர்வமான செயல் ஆற்றலை தான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூன்-201921:15:52 IST Report Abuse
தமிழ்வேல் யோவ் அறிவிலி துரை, உங்க ஆளு கடைசியா திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி (தற்போது நெடுஞ்சாலைத்துறை மந்திரி) யே மோடிஜி சொன்னது உண்மைன்னு ஒத்துக்கிட்டுஇக்காரு.. அப்போ யாரு அறிவிலி ?
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
25-ஜூன்-201921:05:32 IST Report Abuse
Rajas எமெர்ஜென்சியில் வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார். அதை பற்றியாவது தெரியுமா. நாம் ரஸ்யாவிடம் நெருக்கமாக இருந்ததால் (பாக்கிஸ்தான் பக்கம் அமெரிக்கா) அமெரிக்காவின் CIA கைகள் அப்போது இந்தியாவில் அதிகமாக இருந்தது. பிரதமர் அலுவகத்தில் CIA ஆட்கள் இருந்ததாக இந்திராவே ஒரு முறை சொன்னார். மோடியின் பக்கத்தில் இப்போது இருக்கும் ஒருவரை CIA ஏஜென்ட் என்று அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என எல்லோரும் அப்போதே சொல்லியிருந்தார்கள். அப்போது ஊழியர்கள் ஒழுங்காக வேலைக்கு வந்தார்கள், பதுக்கல் இல்லை, அரசியல்வாதிகள் பயந்து போய் இருந்தார்கள்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-ஜூன்-201903:18:21 IST Report Abuse
Cheran Perumalஅப்போ பாகிஸ்தான் மாதிரி நமக்கு ராணுவ ஆட்சிதான் சரிப்பட்டு வரும் என்கிறீர்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X