Situation in West Bengal nothing less than . Emergency: Prakash Javadekar | மம்தாவின் எமர்ஜென்சி ஆட்சி: ஜவடேகர் குற்றச்சாட்டு| Dinamalar

மம்தாவின் எமர்ஜென்சி ஆட்சி: ஜவடேகர் குற்றச்சாட்டு

Added : ஜூன் 25, 2019
மம்தாவின், எமர்ஜென்சி ஆட்சி, ஜவடேகர் குற்றச்சாட்டு

புதுடில்லி: மேற்குவங்க முதல்வர் மம்தாவின் ஆட்சி எமர்ஜென்சிக்கு சற்று குறைவானதல்ல என மத்திய அமைச்சர் குற்றம்சாட்டினார்.

1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி இந்திரா ஆட்சியின் போது ஜனாதிபதியாக இருந்த பக்ருதின் அலி அகமது, இந்திரா ஆலோசனையின்படி நாட்டில் நெருக்கடி நிலையை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தினார்.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எமர்ஜென்சி நிகழ்வை வைத்து சமீபத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக பா.ஜ. ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் மம்தா கூறியது, இன்று நாட்டில் எமர்ஜென்சி பிரகடனப்படுத்திய நாள், இதே போன்று தான், 'கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா, 'சூப்பர் எமர்ஜென்சி'யில் இருந்து வருகிறது ' என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது, மேற்குவங்கத்தில் தற்போது நிகழும் ஆட்சியை பார்த்தால், கடந்த 4 ஆண்டுகளில் மிகவும் மோசமான ஆட்சி தான் நடக்கிறது. மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தாவின் ஆட்சி எமர்ஜென்சிக்கு சற்றும் குறைவானது அல்ல என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X