குடிநீருக்கு இழுத்தடிப்பு; கோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடிநீருக்கு இழுத்தடிப்பு; கோர்ட் உத்தரவு

Added : ஜூன் 25, 2019
Share

கோவை:சூலுார் அருகேயுள்ள நீலாம்பூர், மேற்கு வீதியை சேர்ந்த கருப்புசாமி,69; இவருக்கு சொந்தமான வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி, நீலாம்பூர் கிராமஊராட்சி அலுவலகத்தில் 2016, மே 10ல் விண்ணப்பித்தார்.குடிநீர் இணைப்புக்கான வைப்பு தொகை, ஒரு ஆண்டுக்கான குடிநீர் கட்டணம் சேர்த்து, 2,480 ரூபாய் செலுத்தினார். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால், இணைப்பு வழங்கவில்லை.கருப்புசாமி புகார் அளித்ததை தொடர்ந்து, குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி உதவி இயக்குனர் அறிவுறுத்தினார். அதன்பிறகும், இணைப்பு வழங்கப்படாததால், அக்கம் பக்கத்து வீட்டிலும், கடைகளிலும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினார்.பாதிக்கப்பட்ட கருப்புசாமி, சூலுார் தாலுகா வட்டார வளர்ச்சி அலுவலர் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பில், 'மனுதாரருக்கு ஒரு மாத காலத்துக்குள் குடிநீர் இணைப்பு வழங்காமல், கால தாமதம் செய்தது சேவை குறைபாடாகும்.உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்; இழப்பீடாக 15,000 ரூபாய், வழக்கு செலவுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்' என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X