சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட மேஸ்திரி கொலை: இருவர் மீது குண்டாஸ்

Added : ஜூன் 25, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், கட்டட மேஸ்திரி கொலை வழக்கில், இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 52; கட்டட மேஸ்திரி. வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும் வேலையை செய்து வந்தார். திருப்பூர் எஸ்.வி., காலனியை சேர்ந்த அறிவழகன், 35 என்ற மற்றொரு மேஸ்திரியின் ஆட்களை, ஆரோக்கியசாமி வேலைக்கு அழைத்து சென்றார். இதுதொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த, 5ம் தேதி டூவீலரில் சென்ற ஆரோக்கியசாமியை வழிமறித்து, அறிவழகன் உள்ளிட்ட சிலர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர். மதுரை கோர்ட்டில், அறிவழகன், ஆனந்த் சரணடைந்தனர். அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 'கஸ்டடி' எடுத்து விசாரித்தனர். அதில், சண்முகம், ராஜேந்திரன், சித்திரவேல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.இதையடுத்து, ராஜேந்திரன், 52 மற்றும் சண்முகம், 55 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சித்திரவேலுவை வடக்கு போலீசார் தேடி வருகின்றனர்.இக்கொலை வழக்கில் தொடர்புடைய அறிவழகன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது, பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிந்தது. இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். இருவரையும் கைது செய்து, இதற்கான நகலை கோவை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X