பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன் 26, 1906 ம.பொ.சிவஞானம்:

சென்னை,ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள,சால்வன் குப்பத்தில், 1906 ஜூன், 26ல் பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரின் பள்ளிப்படிப்பு, 3ம் வகுப்புடன் முடிந்தது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, 700 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, சிறந்த சொற்பொழிவாளராக திகழ்ந்தார். 1946ல், 'தமிழரசு கழகம்' என்ற இயக்கத்தை துவக்கினார். காங்கிரசில் இருந்து, 1954 ஆக., 8ல் விலகினார்.'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை மாற்றி, 'தமிழ்நாடு' என்ற பெயர் வைக்கப் போராடினார். மகாகவி பாரதி பற்றி, ம.பொ.சி., பல ஆராய்ச்சி நுால்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் குறித்து எழுதிய நுால்களுக்காக, சேதுப்பிள்ளை என்பவரால், 'சிலம்புச் செல்வர்' எனும் பட்டம் பெற்றார். மத்திய அரசின், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றியவர். 2006ல், இவரது நுால்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. 1995, அக்., 3ல் காலமானார். ம.பொ.சிவஞானம், பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூன்-201913:25:12 IST Report Abuse
Bhaskaran இந்தியா விடுதலை அடைந்த மறுநாள் திருத்தணி வீதிகளில் தனியாளாக திருத்தணியை தமிழகத்துடன் இணைக்கவேண்டும் என்று கூவிக்கொண்டு சென்ற தலைவர் அதைப்பார்த்துதன கடையில் அமர்ந்திருந்த கோல்டன் சுப்பிரமணியம் ம.பொசி ஐயாவுடன் இணைந்துகொண்டார் சிறு துளி பெருவெள்ளமாகியது பெரிய அளவில் வடக்கெல்லை போராட்டம் நடைபெற்று திருத்தணியை தமிழகத்துடன் இணைத்த பெருமை கிராமணி அய்யாவைச்சாரும் துணையிருந்த சுப்பிரமணியம் மங்கலங்கிழார் விநாயகம் ரஷீத் ஆகியோரின் பங்கும் பாராட்டத்தக்கது தமிழகமாணவர்கள் இதுபற்றிய நூல்களை படிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X