ராஜ்யசபா தேர்தல் பா.ஜ., மனு தாக்கல்

Added : ஜூன் 25, 2019
Advertisement
 ராஜ்யசபா தேர்தல்  பா.ஜ., மனு தாக்கல்

புதுடில்லி'குஜராத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கான இடைத் தேர்தலை, ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்' என, காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்து, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி வென்றனர்.
ராஜினாமா

இதையடுத்து, குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.பி., பதவிகளை, அவர்கள் ராஜினாமா செய்தனர்.'அந்த இரண்டு ராஜ்ய சபா இடங்களுக்கு, ஜூலை, 5ல் இடைத் தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.இதை எதிர்த்து, காங்.,கைச் சேர்ந்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ்பாய் தமானி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:இரண்டு இடங்களுக்கும் தனித் தனியாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வுக்கு சாதகமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இரு இடங்களுக்கும் தனித் தனியாக ஓட்டுப் பதிவு நடந்தால், மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள கட்சியின், எம்.எல்.ஏ.,க்கள், அவர்கள் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கே ஆதரவு அளிப்பர்.ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள், சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தொடரலாம்அப்போது, 'இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது' என, அமர்வு கூறியது. 'தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் வழக்கை தொடரலாம்' என, அமர்வு கூறியுள்ளது.இந்த தீர்ப்பு, காங்.,குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குஜராத் சட்டசபையில், மொத்தமுள்ள, 182 இடங்களில், பா.ஜ.,வுக்கு, 100; காங்.,குக்கு, 75, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஏழு இடங்கள் காலியாக உள்ளன.

தனித் தனியாக தேர்தல் நடந்தால், இரண்டு ராஜ்யசபா இடங்களிலும், பா.ஜ., வெற்றி பெறும். ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், முதல் விருப்பம் மற்றும் இரண்டாவது விருப்பம் என, எம்.எல்.ஏ.,க்கள் குறிப்பிட வேண்டும். அந்த நிலையில், ஒரு இடத்தில், பா.ஜ., வெற்றி நிச்சயம்; மற்றொரு இடத்துக்கான தேர்தலில் இழுபறி ஏற்படும் வாய்ப்பு இருந்தது.குஜராத்தில் ராஜ்யசபா இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மத்திய வெளியுறவு அமைச்சர், எஸ். ஜெய்சங்கர், 64, நேற்று மனு தாக்கல் செய்தார்.முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை செயலரான, ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில், வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று முன்தினம், முறைப்படி, பா.ஜ.,வில் அவர் இணைந்தார். அதைத் தொடர்ந்து, குஜராத்தில் காலியாக உள்ள, இரண்டு ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெறும் இடைத் தேர்தல் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்துக்கு, பா.ஜ., வை சேர்ந்த, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர், ஜுகால்ஜி தாக்குர் அறிவிக்கப்பட்டார்.இருவரும் தங்களது வேட்பு மனுக்களை, நேற்று தாக்கல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X