சோக்சியை நாடு கடத்துவோம்: ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு

Added : ஜூன் 25, 2019
Advertisement
 சோக்சியை நாடு கடத்துவோம்: ஆண்டிகுவா பிரதமர் அறிவிப்பு

புதுடில்லி, 'வங்கி மோசடி வழக்கில் தப்பியோடியுள்ள, வைர வியாபாரி, மெஹுல் சோக்சியை, இந்தியாவுக்கு நாடு கடத்துவோம்' என, ஆண்டிகுவாவின் பிரதமர், கஸ்டான் பிரவுனே கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த, வைர வியாபாரிகள், நிரவ் மோடி மற்றும் அவனுடைய உறவினரான, மெஹுல் சோக்சி, 13 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் கூறியது.
வெளிநாடுகளில் தொழில் துவங்குவதற்காக, வங்கியின் கடன் உத்தரவாதம் பெற்று, அதில் மோசடி செய்ததாக, இவர்கள் மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.குடியுரிமைகடந்தாண்டு ஜனவரியில், மெஹுல் சோக்சி வெளிநாடு தப்பிச் சென்றார்.

மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஆண்டிகுவாவில், முதலீடு செய்யும் வெளி நாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அதன்படி, 2017ல் அந்த நாட்டின் குடியுரிமையை, சோக்சி பெற்றிருந்தான். அவன், அங்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளில், மத்திய அரசு இறங்கியது.ஆண்டிகுவாவின் பிரதமர் கஸ்டான் பிரவுனே சமீபத்தில் அளித்த பேட்டியை, அந்த நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டு உள்ளன. அதில், அவர் கூறிஉள்ளதாவது:சோக்சிக்கு, நமது நாட்டு குடியுரிமை அளிக்கப்பட்டது. அதேபோல், அவனுடைய குடியுரிமையை பறித்து, அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தவும் முடியும். மற்றொரு நாட்டில் தேடப்படும் குற்றவாளிகளை நாங்கள் பாதுகாக்கவில்லை. குற்றவாளியாக இருந்தாலும், அவருக்கும் தன் தரப்பை தெரிவிக்க நீதிமன்றத்தில் வாய்ப்பு உள்ளது. இதை, இந்திய அரசிடமும் கூறியுள்ளோம்.
அவருக்கு உள்ள நீதிமன்ற வாய்ப்புகள் அனைத்தும் முடியும்போது, குடியுரிமையை பறித்து, இந்தியாவுக்கு நாடு கடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சிகிச்சைமத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:சோக்சியை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறையில் வழக்குகளை அவர் சந்திக்க வேண்டும். 'நாட்டை விட்டு ஓடவில்லை; சிகிச்சைக்காக சென்றுள்ளேன்' என, நீதிமன்றத்தில் சோக்சி கூறியுள்ளான். அவரை அழைத்து வருவதற்கு, ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்புவதற்கும் தயாராக உள்ளோம்.நிரவ் மோடிக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' எனப்படும், எங்கு பார்த்தாலும் கைது செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளோம். ஆனால், சோக்சி விஷயத்தில், 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பு இந்த நோட்டீசை அளிக்கவில்லை. அதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X