பதிவு செய்த நாள் :
ராகுல் முடிவால் தொண்டர்கள் மகிழ்ச்சி
நிர்வாகிகளுடன் ஆலோசிக்க திட்டம்

புதுடில்லி: விரைவில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களைச் சேர்ந்த, கட்சி நிர்வாகிகளுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த, லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

 ராகுல்,முடிவு, தொண்டர்கள், மகிழ்ச்சி,



இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ராகுல் அறிவித்தார். மூத்த தலைவர்கள், அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.


ஆனால், ராஜினாமா முடிவில், அவர் உறுதியாக இருந்தார். இதனால், கட்சி நிர்வாகி களிடையே, சோர்வு ஏற்பட்டது. இந்நிலையில், மீண்டும் அவர், கட்சி பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளதாக, தகவல் வெளி யாகி உள்ளது.



அடுத்த சில மாதங்களில், மஹாராஷ்டிரா, ஹரியானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த மாநிலங் களின் தலைவர்களுடன், ராகுல், டில்லியில் ஆலோசனை நடத்தவுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன், இந்த மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் கட்சி நிர்வாகிகள் ஆற்றிய பணிகள், அதற்கு கிடைத்த பலன்கள் பற்றியபட்டிய லையும், ராகுல், கேட்டுள்ளதாக கூறப்படு கிறது.



காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக கூறியதிலிருந்து, கட்சி தொடர்பான

Advertisement

எந்த பணிகளிலும், ஈடுபடாமல் தவிர்த்து வந்தார், ராகுல். காங்., முக்கிய தலைவர்கள், அஹமது படேல், வேணுகோபால் ஆகியோரை மட்டுமே சந்தித்தார். மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்தார்.தற்போது, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கட்சி நிர்வாகி களை, அவர் சந்திக்கவுள்ளதாக வெளியான தகவலால், காங்.,முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAS - chennai,இந்தியா
26-ஜூன்-201918:12:51 IST Report Abuse

RAJASமிகவும் பலம் பொருந்திய ஒரு தலைவர் காங்கிரசுக்கு வந்து விட்டால் கும்பல் ஓட்டம் தான்.

Rate this:
RAJAS - chennai,இந்தியா
26-ஜூன்-201918:08:35 IST Report Abuse

RAJASRamsekar . உங்கள் கேள்வி காந்தியின் பேர பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள். கோபாலகிருஷ்ண காந்தியை நினைவிருக்கிறதா. அவர் காந்தியின் பேரன் தான். அவர் Vice President பதவிக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தான் போட்டியிட்டார். அவருக்கு எதிராக பிஜேபியின் முழு நேர அரசியல்வாதி வெங்கய்ய நாயுடு. (ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவை பிஜேபி கண்ட்ரோலில் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வெங்கய்ய நாய்டுவுக்கு உண்டு. ) ஒரு முறை நீங்கள் எழுதியதை செக் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே குதித்து விட்ட பாழும் கிணற்றில் இருந்து வெளியே வர முடியுமா என்று பாருங்கள்.

Rate this:
26-ஜூன்-201917:46:22 IST Report Abuse

Arul Krishpeople are the real jokers....

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X