பொது செய்தி

இந்தியா

ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானமா? சமோசா கடைக்கு வருமான வரித்துறை, 'நோட்டீஸ்'

Updated : ஜூன் 26, 2019 | Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (20)
Advertisement
வருமானம்,  சமோசா கடை, வருமான வரித்துறை, நோட்டீஸ்

அலிகார்: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சமோசா கடையில், ஆண்டுக்கு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாய் வரை, வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வரி செலுத்தும்படி, கடை உரிமையாளருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அலிகார் நகரில், சீமா சினிமா தியேட்டர் அருகில், 'முகேஷ் கச்சோரி' என்ற, சிறிய, சாதாரண, சமோசா கடை உள்ளது. அலிகார், நகர மக்களிடையே, இந்த கடை, மிகவும் பிரபலம்.ரகசிய தகவல்சூடான, சுவையான, கச்சோரி, சமோசா உள்ளிட்டவை, இங்கு, அதிகாலை முதல், நள்ளிரவு வரை, விறுவிறுப்பாக விற்பனையாவது வழக்கம். இந்த கடையில், விற்பனை அதிகம் உள்ளதாகவும், ஆனால், இதற்கு வருமான வரி எதுவும் செலுத்துவதில்லை என்றும், வரித்துறையினருக்கு, சிலர், ரகசிய தகவல் கொடுத்தனர்.
விசாரணையில், கடையின் உரிமையாளர், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், தன் கடையை பதிவு செய்யவில்லை என்ற தகவலும் தெரிய வந்தது.வரித்துறை அதிகாரிகள் சிலர், அந்த கடையின் அருகே நின்றபடி, வாடிக்கையாளர்கள், விற்பனை, லாபம் ஆகியவை குறித்த தகவல்களை, ரகசியமாக கண்காணித்தனர். இதில், தினமும், 700க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் கடைக்கு வருவதாகவும், கடைக்கு, ஆண்டுக்கு, 60 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாய் வரை, வருமானம் கிடைக்கும் என்றும், கணக்கிடப்பட்டது.
இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளருக்கு, வரித்துறை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அளித்துள்ளனர். வரித் தொகையை செலுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.ஒத்துழைப்புஇது குறித்து, கடை உரிமையாளர் முகேஷ் கூறியதாவது:கடந்த, 12 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன். சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரி போன்ற விஷயங்கள் எல்லாம், எனக்கு தெரியாது. வாழ்வாதாரத்துக்காக இந்த கடையை நடத்தி வருகிறேன். வருமானம் அதிகம் கிடைப்பது உண்மை தான். வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
வரித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'இதுபோன்ற கடைகளில், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தால், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், அந்த கடையை, பதிவு செய்ய வேண்டும். வருவாயில், 5 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Iyer - Austin,இந்தியா
29-ஜூன்-201905:59:23 IST Report Abuse
Hari Iyer திருநெல்வேலியில் ஒரு ஜோதிடர் நாள் ஒன்றிற்கு இருபதினாயிரம் வருமானம். நம் பிரச்சினைக்கு ஆம் இல்லை என்று பதில் சொல்வார். அவருக்கு வரிகள் இல்லை. வரி வசூலிக்க சென்றால் அவர்களுக்கு இலவச மாக பலன் சொல்வார்.
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
28-ஜூன்-201919:18:59 IST Report Abuse
TAMILAN முதல்ல போயி நீரவ் மோடி மற்றும் மலேயாவிடம் பைசாவை வாங்குங்க
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
28-ஜூன்-201911:45:02 IST Report Abuse
Cheran Perumal இதேபோல எல்லா டாக்டர் கிளினிக்கிலும் ஆட்களைப்போட்டு கண்காணிக்க வேண்டும். தினசரி பத்தாயிரம் ரூபாய் கல்லா கட்டும் டாக்டர்கள் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X