பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பெரும்பாக்கம் ஏரியில் பாதி மாயம்; மீட்பது யார்?
தொடர்பு எல்லைக்கு அப்பால் பொ.ப.துறை!

பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், பெரும்பாக்கம் ஏரியை புனரமைப்பது யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பாக்கம் ஏரி, மாயம், மீட்பது யார்,  தொடர்பு எல்லை, பொதுப்பணித்துறை
வட கிழக்குபருவமழை துவங்கும் முன், ஏரியை புனரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம்உருவாகியுள்ளது.தென் சென்னையில் உள்ள ஏரிகளில் மிகப்பெரி யது, பெரும்பாக்கம் ஏரி.கடல்நீர் உட்புகாமல் தடுத்து, நிலத்தடி நீர் மட்டத்தை நிலையாக வைத்திருக்கும் அளவிற்கு, இந்த ஏரி சிறந்து விளங்கியது. ஏரியை சுற்றிய பகுதிகளில், விளைநிலங்களுக்கு, பாசனம் வழங்குவதில், இந்த ஏரி தான் பெரும் பங்கு வகித்தது.கட்டடங்கள்
பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கை வாசல்,மேடவாக்கம்,வள்ளுவர் நகர் பகுதிகளில், அரசியல்வாதிகளும், சமூக விரோதிகளும், ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் புகுந்து, ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டினர். இதனால்,420 ஏக்கராக இருந்த ஏரியின் பரப்பளவு, தற்போது, 250 ஏக்கராக குறுகி விட்டது. பல ஆண்டுகளாக, கழிவுநீர் கொட்டும் பகுதியாகவும், ஏரி மாறிவிட்டது. இவற்றை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொதுப்பணித்துறை எந்த முயற்சியும் எடுக்காமல், தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.சில மாதங்களுக்கு முன், சென்னை புறநகரில்,

பெரும்பாக்கம் உள்ளிட்ட, 10 ஏரிகளின் நீர்
மாதிரியை எடுத்து, சென்னை, சி.பி.ஆர்., சுற்றுச் சூழல் கல்வி மையம் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில், பெரும்பாக்கம் ஏரியில் தான், 1 லிட்டரில், 3,998 மி.கி., என, அதிக நச்சுப் பொருட்கள்
உள்ளது,கண்டறியப்பட்டது.


உபரிநீர்
கடற்கரைக்கு அருகேயுள்ள இந்த ஏரிக்கு, பெருங்களத்துார், முடிச்சூர், சேலையூர், மாடம்பாக்கம், வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம் ஏரிகளில் இருந்து, உபரிநீர் வந்து சேரும் வகையில், வரத்து கால்வாய்கள் முறையாக அமைக்கப்பட்டு இருந்தன. ஏரியில் இருந்து, ஜல்லடியான்பேட்டை, சித்தேரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக, உபரிநீர் கடலில் கலக்கும்.சென்னை புறநகர் வளர்ச்சி காரணமாக, வரத்துக் கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.சித்தாலப்பாக்கம் ஏரியில் இருந்து, பெரும்பாக்கம் ஏரிக்கு செல்லும் போக்கு கால்வாயை மட்டும், பொதுப்பணித்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.அலட்சியம்
ஆனால், ஏரி பராமரிப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள, பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர், தியாக ராஜன், உதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர், குஜராஜ் ஆகியோர், ஏரி சீரமைப்பை பற்றி கவலைப்படாமல், அலட்சியமாக உள்ளனர்.இவர்களை,நேரில் சந்திக்க முடியவில்லை. மொபைல் போன் வாயிலாக, பல முறை தொடர்பு கொள்ள முயன்றும், எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர். இதனால், இந்த ஏரியை சீரமைப்பது யார் என்ற கேள்வி எழுந்துஉள்ளது.


'மண் திருட்டு அமோகம்'
நாய் குதறுவது போல, பெரும்பாக்கம் ஏரியில்,

Advertisement

திருட்டுத்தனமாக மண் அள்ளியுள்ளனர். இதனால், ஏரியின் பல இடங்களிலும், குட்டை கள் அதிகமாகி உள்ளன. அந்த குட்டைகளில் மட்டும் தான் மழைநீர் தேங்குகிறது. பொதுப்பணித்துறை, முதலில், குட்டைகளை ஒன்றிணைத்து, ஒரே பரப்பாக மாற்ற வேண்டும்; கரைகளை பலப்படுத்த வேண்டும்.கலங்கல் பகுதியில், மதகு அமைத்து, நீரை சேமித்து வெளியேற்றும் அமைப்பை உருவாக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை யினர் உதவியுடன், தண்ணீர் வெளியேறும் சாலையில், மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், ஏரியின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், மழைக்காலங் களில், வெள்ள பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.


எஸ்.திருநாவுக்கரசு,


ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
26-ஜூன்-201916:04:07 IST Report Abuse

தமிழ் மைந்தன்மண் எடுத்தால்தான் ஏரி ஆழமாகும்.....இது அதிக தண்ணீரை தேக்கும்....இது அரசு செய்ய வேண்டிய வேலை....ஆனாலும் மண் எடுத்தால் அதை திருட்டு மண் என பிடிப்பது.....பின் எப்படி பிரச்சினை தீரும்.......தேர்தலில் மட்டுமல்ல இபுபோதும் தமிழக மக்கள் முட்டாள்களே.......வேலை வாய்ப்பு வேண்டும் என்பது தொழில்சாலைகளை மூடச்சொல்வது, விவசாய வேலைக்கும் வருவதில்லை, புகையிலை பொருட்களை தடை செய்ய சொல்வது பின் பீடி தொழில் பாதிக்கும் என போராட்டம், மணல் அள்ளக்கூடாது என போராட்டம் மணல் வேண்டும் என மற்றொறு போராட்டம்............புதைக்க இடம் கேட்டு போராட்டம், இப்படியே போனால் திமுக ஆட்சிக்கு வராமலேயே தமிழ்நாடு சுடுகாடாகி விடும்......

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
26-ஜூன்-201910:43:25 IST Report Abuse

நக்கீரன்பொதுப்பணித்துறை என்ற ஒரு துறை தமிழ்நாட்டில் இருக்கிறதா? வேடிக்கைதான். இயற்க்கை கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் அழிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விலையை விரைவில் நாம் கொடுக்க வேண்டும்.

Rate this:
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
26-ஜூன்-201907:39:12 IST Report Abuse

Rajaiah Samuel Muthiahrajஇதேபோல ஒவ்வொரு மாவடடத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி உங்களது அந்தந்த மாவடட மற்றும் தலைநகரது நிருபர்கள் எழுத்துவார்களா அதுவும் காஞ்சிபுரம் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றி ஏன் கண்டுகொள்ளுவதேயில்லை

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X