பதிவு செய்த நாள் :
பதிலடி!
காங்., குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி...
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச்சு

புதுடில்லி: பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், லோக்சபாவில் நேற்று முன் தினம் துவங்கியது. அப்போது பேசிய, லோக்சபா காங்., தலைவர், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார். அவரின் பேச்சுக்களில்சில வரிகள், சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடப்பு லோக்சபாவில், முதல் முறையாக, பிரதமர் மோடி உரையாற்றினார்.

காங்., குற்றச்சாட்டு, பிரதமர் ,மோடி, பதிலடிபிரதமர் மோடி பேசியதாவது:இந்த சபையில், நேற்று முன்தினம் பேசிய, காங்கிரசின் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காங்., சாதனைகளை பட்டியலிட்டார். காங்கிரசின் கொள்கைகளைத் தான், நாங்கள் துாசி தட்டி எடுத்து, வேறு பெயர் சூட்டி பயன்படுத்துவதாக கூறினார். அவர் ஒன்றை சொல்ல மறந்து விட்டார்.நாட்டில் காங்கிரஸ் கொண்டு வந்த, அவசர நிலை எனப்படும், 'எமர்ஜென்சி'யை அறிமுகப்படுத்தி யதை, அவர் கூற தவறி விட்டார்.இன்றிலிருந்து, 44 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியில் தான் நீடிக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ஒருவர்.பத்திரிகைகளின் வாய் பூட்டப்பட்டது; எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; இந்த நாட்டின் ஆன்மா நசுக்கப்பட்டது. அத்தகைய செயலை செய்தவர்களை, இந்த நாடு ஒரு போதும் மன்னிக்காது. அவர்கள் செய்த பாவத்திற்கு விமோசனமே கிடையாது.வணங்குகிறது

அந்த காலத்தில், நாட்டின் ஜனநாயக குரல் வளை நசுக்கப்பட்டதை யாராலும் மறக்க முடியுமா? அந்த நிலையை எதிர்த்து, போராடிய தலைவர்களை நான் வணங்குகிறேன்; இந்த நாடே வணங்குகிறது.முந்தைய ஆண்டுகளில், உச்சாணிக் கொம்பில் காங்கிரஸ் இருந்தது என்றார், நேற்று முன்தினம் பேசியவர். அதற்காக வாழ்த்துகள். அதே நேரத்தில், நீங்கள் தரையில் நடப்பது என்ன என்பதை பார்க்கத் தவறி விட்டீர்கள்.நாங்கள் உங்களைப் போல உச்சியை அடைய விரும்பவில்லை. தரையில், மக்களுடன் மக்களாக இருக்க விரும்பினோம். அது, இந்த தேர்தலில் நடந்தது; எங்களுக்கு அமோக வெற்றி கிடைத்தது.அர்ப்பணிப்போம்

காங்கிரசின் சாதனைகளை நாங்கள் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றனர். அது எங்கள்

வேலையில்லை; அந்த தவறை செய்ய மாட்டோம். அதே நேரத்தில், இந்த நாட்டை உயர்த்திக் காண்பிப்போம். அதற்காக எங்கள் வாழ்வை அர்ப்பணிப்போம்.இந்த நாட்டின் முன்னேற்றத்தை, சிலர் தான் மேற் கொண்டனர் என, சிலர் நினைக்கின்றனர். அவர்கள், சிலரின் பெயரை உச்சரிக்கின்றனர்; ஆனால், பலரை மறந்து விட்டனர். மறக்கடிக்கப் பட்டவர்களை நாங்கள் நினைவுகூருகிறோம். அதையே நாங்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறோம்; இந்த நாட்டின் முன்னேற்றத்திற் காக, ஒவ்வொருகுடிமகனும் பாடுபட்டுள்ளான்; அவர்களை நாங்கள் கவுரவிக்கிறோம்.
நாங்கள் சிறப்பான முறையில், ஐந்தாண்டு ஆட்சியைக் கொடுத்ததால் தான், 2019ல் மீண்டும், ஐந்தாண்டு ஆட்சி செய்ய, மக்கள் எங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். முந்தைய எங்களின் ஐந்தாண்டு சாதனை தான், இந்த ஐந்தாண்டு ஆட்சிக்கான அத்தாட்சி.கடந்த, 2014 தேர்தலின் போது, நாங்கள் மக்களுக்கு புதிதாகத் தெரிந்தோம். காங்கிரசை கைகழுவ வேண்டும் என, நினைத்த மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்தினர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இவ்வாறு மோடி பேசியதை, காங்கிரஸ் தலைவர் ராகுல், கன்னத்தில் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் தாய், சோனியா, மவுனமாக இருந்தார். காங்கிரஸ் எம்.பி.,க்கள், அவ்வப்போது, எதிர்ப்பு கோஷமிட்டனர்.
நாங்கள், உச்சாணிக் கொம்பை யோசித்துக் கொண்டிருந்தோம் என, பிரதமர் மோடி கூறுகிறார். அதையே நான் சற்று மாற்றி கூறுகிறேன். இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக, உயர்ந்த கனவை நாங்கள் கொண்டிருந் தோம். பிரதமர் மோடி தன் நாவன்மையால், எதுகை, மோனையுடன் அழகாக பேசினார். ஆனால், நாங்கள், உவமையும், உண்மையும் வேறு என,கூறுகிறோம்.


சசி தரூர், காங்., - எம்.பி.,
மன்மோகனையாவது பாராட்டினீர்களா?பிரதமர் மோடி பேசியதாவது:காங்.,தலைவர்களின் உண்மையான செயல்பாடுகளை நாங்கள் பாராட்ட வில்லை என கூறினர். அவர்களுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். 2004 - 2014 வரை நீங்கள் தானே, ஆட்சியில் இருந்தீர்கள்... அப்போது, நேரு - இந்திரா குடும்பத்தினரை தவிர்த்து, வேறு எந்ததலைவர் களையாவது நீங்கள் புகழ்ந்துள்ளீர்களா?வாஜ்பாயின் சீரிய ஆட்சியை புகழ்ந்தீர்களா... நரசிம்மராவ் ஆட்சியைத் தான் நீங்கள் பாராட்டினீர் களா... இல்லை, மன்மோகன் சிங்கை தான் பாராட்டியுள்ளீர்களா?நீங்கள், அந்த குடும்பத்தை தவிர்த்து, வேறு யாரையும் பாராட்டியதில்லை. காங்கிரசை சேர்ந்த, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப்

Advertisement

முகர்ஜிக்கு, நாங்கள், 'பாரத ரத்னா' விருது வழங்கி, கவுரவித்துள்ளோம். இவ்வாறு மோடி பேசினார்.


மோடி பேச்சின் பிற முக்கிய அம்சங்கள்
*நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக, நாங்கள் அயராது பாடுபடுகிறோம். இதைப் பார்க்கும் மக்கள்,காங்கிரஸ் அரசு ஏன் இவ் வாறு பாடுபடவில்லை என, யோசிக்கின்றனர்


* காந்தியடிகளின் போராட்டத்தால் தான், நமக்கு சுதந்திரம் கிடைத்தது. எனவே, அவரின், 150வது பிறந்த நாள் மற்றும் நாட்டின், 75வது சுதந்திர தினத்தை மக்கள் உற்சாகமாக கொண்டாட வேண்டும்* நிலையான அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்; நாட்டின் முன்னேற்றம் தான், மக்களின் விருப்பமாக உள்ளது* எங்களின் வளர்ச்சிப் பாதை இலக்கிலிருந்து, எப்போதும் மாறப் போவதில்லை. மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும்; நவீன அடிப்படை வசதிகள் அளிக்க வேண்டும் என்பது தான், எங்கள் குறிக்கோள்* பெண்களை முன்னேற்ற, காங்கிரசுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அந்த காலகட்டத்தி லேயே, 'அனைவருக்கும் ஒரே சட்டம்' குறித்து பேசப்பட்டது. சுதந்திரம் அடைந்து,35ஆண்டுகளுக்குப் பின், ஷா பானோவிவகாரம் வாய்த்தது. அதையும், காங்கிரஸ் தவற விட்டுவிட்டது.ஜாமினில் உள்ள சோனியா

பிரதமர் மோடி பேசியதாவது:காங்கிரஸ் அரசு மீது, பொய் வழக்குகளை தொடர்ந்தனர் என்றும், ஊழல் செய்திருந்தால், ராகுல் இங்கு இருப்பாரா... சோனியா இருப்பாரா... என,எம்.பி., ஆதிர்ரஞ்சன் பேசினார். அவருக்கு நான் பதில் சொல்கிறேன்.இது, எமர்ஜென்சி காலமில்லை... நினைத்ததும் யாரையும் பிடித்து சிறையில் தள்ள! இது, ஜன நாயக ஆட்சி. சட்டத்தை நீதிமன்றங்கள் பராமரிக்கின்றன. அதில், நாங்கள் தலையிடு வதில்லை.அந்த, எம்.பி., சொன்ன தலைவர்கள், வழக்குகளில் சிக்கி, ஜாமின் பெற்று உள்ளனர் என்பதை மறந்து விட்டார்.இவ்வாறு பேசிய மோடி, 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், ராகுல், சோனியா ஜாமின் பெற்றுள்ளதை, மறைமுகமாக குறிப்பிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
26-ஜூன்-201910:11:39 IST Report Abuse

ganapati sbமுந்தைய ஆட்சியில் ஏழைகளுக்கு வங்கி கணக்கு கழிவறை புகை அடுப்பு சுயதொழில் கடன் மின்சார பிரச்சனைகளை தீர்த்த மோடி இந்த ஆட்சியில் குடிநீர் வீடு விவசாய பாசனம் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சனைகளை தீர்க்க உறுதி பூண்டுள்ளார் நாட்டு மக்களுக்கு அயராது உழைக்கும் பிரதமருக்கு பாராட்டுக்கள்

Rate this:
Anandan - chennai,இந்தியா
28-ஜூன்-201905:26:10 IST Report Abuse

Anandanஐந்து வருட ஆட்சி முடிந்து ஆறாவது ஆண்டிலும் உறுதி பூண்டுள்ளார்? ஆனால் செயலில் காட்டமாட்டாருனு பாடும் படாமல் சொல்லிட்டீங்க கணபதி. ...

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
26-ஜூன்-201910:11:01 IST Report Abuse

Ambika. KEmergency ல எல்லாரையும் ஜெயிலில் போட்டதால் வெளியிலேயே வரவில்லை அதுதான் உண்மை

Rate this:
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-ஜூன்-201909:05:32 IST Report Abuse

தாண்டவக்கோன்Emergency போது - Nov 8, 2016 க்கு பிறகுபோல - மக்கள் நடுத்தெருவுக்கு வந்ததாக வரலாறு கூறவில்லை, விவரமறிந்த பெரியவர்களும் கூறவில்லை.

Rate this:
Anandan - chennai,இந்தியா
28-ஜூன்-201905:27:09 IST Report Abuse

Anandanநிர்வாக திறன் இல்லை வெறும் பேச்சு மட்டும் என்பதற்கு இன்னும் வாய்ப்பந்தலிலும் காங்கிரசை வசை பாடுவதிலும் காலத்தை கடத்துவதில் இருந்து தெளிவாகத்தான் தெரிகிறது. ...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X