பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மருத்துவ வசதிகள் மீண்டும் கேரளா முதலிடம்

புதுடில்லி: நாட்டில் சிறந்த மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரமான மாநிலங்களின் பட்டியலில், கேரளா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

 மருத்துவ வசதிகள், கேரளா ,முதலிடம்


பீஹார் மற்றும் உத்தர பிரதேசம் மிகவும் மோசமானமாநிலங்களாக உள்ளன.மருத்துவ வசதிகள், குழந்தைப் பிறப்பு,பிரசவத்தின்போது கர்ப்பிணிகள் உயிரிழப்பது, குழந்தைகள் இறந்தே பிறப்பது என, 23 அம்சங்களின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலமும்
பட்டியலிடப்படுகிறது.



மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும்,


'நிடி ஆயோக்' அமைப்பு இந்தப் பட்டியலை வெளி யிட்டது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் இருந்த, கேரளா, இந்த முறையும் முதலிடம் பிடித்துள்ளது.



பெரிய மாநிலங்கள்,சிறிய மாநிலங்கள்,யூனியன் பிரதேசங் கள் என, 3 பிரிவுகளாக பிரிக்கபட்டு, அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், நிடி ஆயோக் துணை தலைவர், ராஜிவ் குமார், இந்தப் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.



அதன்படி, பெரிய மாநிலங்களில், கேரளா, 2 வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. ஆந்திரா, மஹாராஷ்டிரா அதற்கடுத்த இடங்களில் உள்ளன.கடந்தாண்டு வெளியிடப்பட்ட, முதல் பட்டியலில், கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு, முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தன.
பெரிய மாநிலங்களில், மிகவும் மோசமான மாநிலங்களாக, பீஹார் மற்றும் உ. பி.,உள்ளன.

Advertisement

முந்தைய ஆண்டைவிட, அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களாக, ஹரியானா, ஜார்க்கண்ட், அசாம் உள்ளன. அதே நேரத்தில், முன்பைவிட மிக வும் மோசமான மாநிலமாக, சத்தீஸ்கர் உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த பட்டியல் தயரிக்கப்பட்டு உள்ளது.



சிறிய மாநிலங்களில், மிசோரம், மணிப்பூர் ஆகியவை முதலிரண்டு இடங்களில் உள்ளன. மணிப்பூர் மற்றும் கோவா ஆகியவை, நல்ல முன்னேற்றம் கண்ட மாநிலங்களாக உள்ளன. யூனியன் பிரதேசங் களில், சண்டிகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.



தமிழகம் பின்னடைவு





கடந்த முறை வெளியிடப்பட்ட பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது, 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
26-ஜூன்-201913:50:20 IST Report Abuse

pattikkaattaan நியாயப்படி பார்த்தால் உத்தரப்பிரதேசத்திற்குத்தான் முதலிடம் தரவேண்டும் .. அங்கு மக்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் .. கேரளாவில் புதுசு புதுசா வைரஸ் வருது , அதனால கடைசி இடம் தரவேண்டும் ..

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
26-ஜூன்-201915:00:27 IST Report Abuse

pradeesh parthasarathyபாத்தியா நீ இன்னும் திருந்தவே மாட்ட ... ...

Rate this:
Raj - coimbatore,இந்தியா
26-ஜூன்-201912:58:03 IST Report Abuse

Rajஅவர்களுடைய மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் எல்லையோரங்களில் கொண்டு வந்து கொட்டுவதை நிறுத்த வழி செய்ய வேண்டும். பிறகு பார்க்கலாம் அவர்கள் எந்த அளவுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று.

Rate this:
konanki - Chennai,இந்தியா
26-ஜூன்-201911:19:19 IST Report Abuse

konankiதமிழ் நாட்டின் தீய சக்திகள் சுடலை சைக்கோ மய்யம் குருமா டேனியல் ஸ்பாஸடியன் நாரமணி ளுடன் சேர்ந்து கொண்டு தமிழ் நாட்டில் மட்டும் நீட் தேர்வை எதிர்க்கும கம்யூனிஸ்ட்கள் கேராளவில் நீட் டை எதிர்காதது இதனால் தான்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X