பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,வுக்கு பா.ஜ., வக்காலத்து
சரமாரியாக பதிலடி தந்தது தி.மு.க.,

தமிழக அரசை கடுமையாக தாக்கிப் பேசியது டன், தன்னுடன் கடும் வாக்குவாதத்தில் இறங்கிய பா.ஜ., மூத்த எம்.பி.,க்களுக்கு, தி.மு.க., - எம்.பி., தயாநிதி, சரியான பதிலடி கொடுத்ததால், லோக்சபாவில், பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க.,பா.ஜ., வக்காலத்து, பதிலடி, தி.மு.க., தயாநிதி, லோக்சபா, பார்லிமென்ட்பலவீனம்ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, லோக்சபாவில், தி.மு.க., எம்.பி., தயாநிதி பேசியதாவது:இத்தனை பெரிய வெற்றியை, பா.ஜ., பெற்றது, தனது பலத்தால் அல்ல; எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால்தான். இதை, பா.ஜ., உணர வேண்டும். மற்ற எம்.பி.,க் கள், பதவியேற்பு உறுதிமொழி எடுத்தபோது, பா.ஜ., -எம்.பி.,க்கள் எல்லை மீறி குரல் எழுப்பினர்.கடந்த, 1962ல், காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின், ராஜ்யசபாவில், தி.மு.க., நிறுவன தலைவர் அண்ணாதுரை பேசினார். அப்போது, 'வெற்றி பெற்று விட்டோமென்று, குதிப்பதை விட்டுவிட்டு, பணிவுடனும், பண்புடனும், பெருந்தன்மையுடனும் ஆளுங் கட்சியாக பணியாற்ற வேண்டும்' என்றார். அதையே தான், நானும், பா.ஜ.,வுக்கு கூற விரும்புகிறேன்.தமிழகத்தில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாநிலத்தை ஆளும்

ஊழல் கறை படித்த அரசுதான், இதற்கு காரணம்.இவ்வாறு, அவர் பேசினார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த், ''ஊழல் அரசு என்று கூறுவது, சபை விதிகளுக்கு புறம்பானது. ஒரு மாநில சட்டசபை குறித்து, லோக்சபாவில் பேச கூடாது,'' என்றார். இதற்கு அசராத தயாநிதி, ''ஜனாதிபதி உரையில், வரிக்கு வரி, 'ஊழலை ஒழிப்பதே இந்த அரசின் நோக்கம்' என, கூறப்பட்டுள்ளது. எனவேதான், உங்களது கூட்டணி கட்சி குறித்து, குறிப்பிட வேண்டியதாயிற்று,'' என்றார்.உடன், இன்னொரு பா.ஜ.,எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி,''ஜனாதிபதி உரையில், தமிழகம் என்ற வார்த்தையே இல்லாதபோது, அது பற்றிபேச கூடாது,'' என்றார்.உடனே தயாநிதி, ''புரிகிறது, தங்களதுஅடிமைகளை பாதுகாக்க வேண்டியது, எஜமானர்களின் கடமை என்பதை நன்கு அறிவேன்,'' என்றார்.கூச்சல், குழப்பம்இதை, சற்றும் எதிர்பார்க்காத பா.ஜ., தரப்பு, பரபரப்பானது. இதையடுத்து, 'அடிமை' என்ற வார்த்தையை, சபைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென, மத்திய இணையமைச்சர் அர்ஜுன் மேக்வால், வாதிட்டார்.ஆனாலும், தொடர்ந்து பேசிய தயாநிதி, கூறியதாவது:நாடெல்லாம் வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு, தமிழகம் மட்டும் ஏன் ஓட்டுப்போடவில்லை தெரியுமா? உங்களுக்கு தோணுகிற அனைத்தையுமே, இஷ்டம்போல தமிழகம் மீது திணிக்கிறீர்களே, அதுதான்காரணம்.
காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடாதென, சுப்ரீம்கோர்ட்டே சொல்லி விட்டது. ஆனால், மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, தனது மாநிலத்திற்கு சாதகமாக, அணை கட்டவேண்டும்

Advertisement

என, பகிரங்கமாக பேசினால்,தமிழகம் எப்படி பொறுத்து கொள்ளும். இவ்வாறு, அவர் பேசினார்.இதையடுத்து, கர்நாடக, எம்.பி.,க்கள் எழுந்து, கடும் வாக்குவாதத்தில் இறங்கவே, சபைக்குள் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.


ஹிந்தியில் பேசிய அ.தி.மு.க., - எம்.பி.,ஜனாதிபதி உரை மீது அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் குமார் பேசியதாவது:சுவாமி விவேகானந்தர், 'எனக்கு வலிமையான, 100 இளைஞர்களை மட்டும் தாருங்கள். இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார். அந்த விவேகானந்தரைத்தான், நமது பிரதமர் மோடியின் முகத்தில் காண்கிறேன்.தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தபட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, நாடு முழுவதும் விரிவாக்க வேண்டும். இதற்கென, தனி மசோதா கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். அடுத்து, பகவத் கீதையில் இருந்து சில வரிகளை, ஹிந்தியில் பேசினார் ரவீந்திரநாத்.


அதன் பொருள்: மிகப்பெரிய மனிதரின் செயல் களைத்தான்,மக்கள் பின்பற்றுவார்கள். அவரின் தன்னிகரற்ற செயல்கள் மூலம் எத்தகைய இலக்கை நிர்ணயிக்கிறாரோ, அது, இந்த உலகம் முழுவதும்வியாபித்திருக்கும்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
26-ஜூன்-201921:03:46 IST Report Abuse

balஇவ்வளவு வாய் கிழிந்ததே... ஏன் ராகுலிடம் சொல்லி காவிரியிலிருந்து தண்ணீர் விட சொல்லவில்லை... ரொம்ப யோக்கியம் மாதிரி பேச்சு.

Rate this:
dinesh - pune,இந்தியா
26-ஜூன்-201919:31:56 IST Report Abuse

dineshSaaththaan vetham othugirathu

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
26-ஜூன்-201917:13:22 IST Report Abuse

r.sundaramதமிழகத்துக்கு வேண்டாத திட்டங்களுக்குத்தான் சுடலை கையெழுத்து போட்டாரோ? தற்போது வைகோவும் திமுகவும் எதிர்க்கும் எல்லா திட்டங்களையும் தமிழகத்துக்கு வேண்டும் என்று கொண்டு வந்தது காங்கிரஸும் திமுகவும் அங்கம் வகித்த அரசுதான். தற்போது இவர்கள் அதை தமிழக மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஓட்டுக்காக எதிர்க்கின்றனர். நாளையே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் அரசு அமையுமானால் இந்த திட்டங்கள் சத்தம் காட்டாமல் தமிழகத்தில் நிறைவேற்றப்படும். தமிழகத்தை போல் தான் செய்த நல்ல செயல்களை சொல்லி பரப்புரை செய்ய தெரிய வில்லை பி ஜெ பிக்கு. திமுகாவின் பசப்பு மொழிகளுக்கு செவிசாய்த்து மக்கள் வாய்ப்பு அளித்து உள்ளனர். ஆனால்அதை இவர்கள் தங்களது ஆதாயத்துக்காகத்தான் பயன்படுத்த போகின்றனர். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Rate this:
Rajas - chennai,இந்தியா
26-ஜூன்-201918:41:08 IST Report Abuse

Rajasஆனால் இந்த இடம் தான் என்று திமுகவினர் கையெழுத்து போட்டார்களா. விளைநிலங்களை பாழ் செய்து திட்டம் கொண்டு வந்தது யார். சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை தேவையா. அதற்க்கு பதிலாக பல ரயில்களை ஓட்டலாமே. ...

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X