புதுடில்லி: இந்த வாரம் ஜப்பான் சென்று 'ஜி-20' மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே, பிரான்ஸ் அதிபர் மக்ரான் உட்பட பலரை சந்தித்து பேச உள்ளார்.
'ஜி-20' எனப்படும் 19நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனின் ௧௪வது மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 28, 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் பா.ஜ.வை சேர்ந்த சுரேஷ் பிரபுசெய்கிறார்.
ஒத்துழைப்பு கூட்டங்கள்
ஜப்பான் - அமெரிக்கா - இந்தியா முத்தரப்பு ஒத்துழைப்பு பேச்சு; 'பிரிக்ஸ்' எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தெ.ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.அந்த சந்திப்புகளிலும் பிற மாநாடு களிலும் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து இந்தியாவுடனான உறவை மேம்படுத்த பேச்சு நடத்தஉள்ளார்.
எரிசக்தி பாதுகாப்பு
குறிப்பாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன், அமெரிக்க அதிபர் டிரம்ப்,பிரான்ஸ் அதிபர்எம்மானுவேல் மக்ரான் போன்றோரை சந்திக்க உள்ளார். இவர்களுடன் எரிசக்தி பாதுகாப்பு நிதி ஸ்திரத்தன்மை
உலக பொருளாதார ஒப்பந்த சீரமைப்பு நடவடிக்கை கள் உலகளாவிய பொருளார நிலைகுறித்து மோடி விவாதிக்கிறார்.
'ஜி - 20' நாடுகள்
அர்ஜென்டினா,ஆஸி.,,பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள்,பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (6)
Reply
Reply
Reply