பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மருத்துவ மாணவர்கள் 4 பேருக்கு தங்கப்பதக்கம்

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement
மதுரை மருத்துவ மாணவர்கள் 4 பேருக்கு தங்கப்பதக்கம்

மதுரை, மதுரை அரசுமருத்துவக் கல்லுாரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அளவில் 2018ம் ஆண்டு நடந்த தேர்வு முடிவு கடந்த ஆகஸ்ட்டில் வெளியானது. பல்கலை அளவில் அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெறுவோர் பட்டியல் துறைவாரியாக தற்போது வெளியாகி உள்ளது.இதில் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவிகள் மூவர் உட்பட நான்கு பேர் இடம் பிடித்துள்ளனர்.காது, மூக்கு, தொண்டை துறையில் எம்.எஸ்., படிப்பில் மாணவி சரண்யாவும், அதே துறையில் டி.எல்.ஓ., படிப்பில் மாணவி ப்ரீத்தாவும் தமிழக அளவில் முதல் இடம் பிடித்துள்ளனர்.எம்.சிஎச்., (கார்டியோ வாஸ்குலர் அண்ட் தொராசிக் சர்ஜரி) படிப்பில் மாணவர் சித்தார்த் முதல் இடமும், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவி மகதி முதலிடமும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மதுரை மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.இவர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற 124 பேருக்கும் சென்னையில் 29ம் தேதி நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesh - madurai,இந்தியா
26-ஜூன்-201912:24:23 IST Report Abuse
ganesh இவர்களுக்கும் தினமலர் நாளிதழுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தினமலரில் இவர்களைப்பற்றி இன்னும் கொஞ்சம் இடம் ஒதுக்கி தனித்தனியே போட்டோ போட்டு எழுதிருக்க்கலாம் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு ஏனன்றால் திரு தங்கத்தமிழ்செல்வனுக்கு கொடுத்த முன்னுரிமை கொடுக்கலையோ என்பது எனது கூற்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X