பொது செய்தி

தமிழ்நாடு

கைகூடி வரும் மின்முலாம் பொது பரிசோதனை மையம்!

Added : ஜூன் 25, 2019
Advertisement

கோவை:கோவை மாவட்ட மின்முலாம் பூசுவோர் சங்கத்தின் (கொடியா) முயற்சியின் பலனாக, பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்ய, பொது பரிசோதனை மையம் அமைக்கும் முயற்சி, கைகூடி வந்திருக்கிறது.ஒரு உலோகத்தின் மீது, இன்னோர் உலோகத்தின் அடுக்கு படிய செய்தலை முலாம் பூசுதல் என்கிறது அறிவியல். உலோகப் பொருட்கள் துருபிடித்து போகாமல் இருப்பதற்காகவும், அழகூட்டுவதற்காகவும், தேய்மானம் அடையாமல் இருப்பதற்காகவும் முலாம் பூசப்படுகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான், மின்முலாம் பூசும் தொழில் நடைபெறுகிறது. இங்கு, 250 மின்முலாம் பூசும் நிறுவனங்களும், அதனை நம்பி 10 ஆயிரம் தொழிலாளர்களும் இருக்கின்றனர். கோவையை அடுத்துள்ள குரும்பபாளையம் பகுதியில், கொடியாவின் சொந்த முதலீட்டில், கொடியா மின்முலாம் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.2006ம் ஆண்டு அமைக்கப்பட்ட அதில், 83 மனை பிரிவுகள் இருக்கின்றன. தற்சமயம் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கொடியா செயலாளர் ஜெயக்குமார் கூறுகையில், ''மின்முலாம் பூசும் பொருட்களின் தரத்தை சோதனை செய்ய, வெளியில் இருக்கும் பரிசோதனைக் கூடங்களை நாட வேண்டியிருக்கிறது. அதற்கு கூடுதல் செலவாகிறது. எனவே, எங்கள் தொழில் பூங்காவிலேயே பொது பரிசோதனைக்கூடம் அமைத்து தரும்படி, மத்திய அரசை கேட்டிருக்கிறோம்.
எம்.எஸ்.எம்.இ., துறையின் மூலம், எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. முழுமையான திட்ட அறிக்கை தரும்படி கேட்டிருக்கின்றனர். அதனை தயார் செய்து கொண்டிருக்கிறோம். விரைவில் பொது பரிசோதனை மையம் அமையும் என்று நம்புகிறோம்,'' என்றார்.சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான், மின்முலாம் பூசும் தொழில் நடைபெறுகிறது. இங்கு, 250 மின்முலாம் பூசும் நிறுவனங்களும், அதனை நம்பி 10 ஆயிரம் தொழிலாளர்களும் இருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X