பொது செய்தி

தமிழ்நாடு

கடலில் மிதந்த 1 டன் பீடி இலை பண்டல்கள்

Added : ஜூன் 25, 2019
Advertisement

ராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடலில் மிதந்த ஒரு டன் பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மன்னார் வளைகுடா கடலில் வாலிநோக்கம் கடல்பகுதியில் 15 பிளாஸ்டிக் பண்டல்கள் மிதந்தன.

மீனவர்கள் கடலோரபாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவற்றை கைப்பற்றி போலீசார் பிரித்து பார்த்தபோது பீடி இலைகள் இருந்தன. ஏர்வாடி சடை முனியன் வலசைப்பகுதியிலும் இதுபோன்ற 2 பண்டல்கள் கைப்பற்றப்பட்டன.இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கூறியதாவது: படகில் இலங்கைக்கு பீடி இலைபண்டல்கள் கடத்தப்பட்டிருக்கலாம். ரோந்து படகுகள் வந்ததை பார்த்து கடலுக்குள் துாக்கி போட்டிருக்கலாம், என்றனர். இதுவரை ஒரு டன் பீடி இலை பண்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X