பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை 4ல் சிகாகோவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு

Added : ஜூன் 25, 2019
Advertisement

சென்னை, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7ம் தேதி வரை 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது.இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன்,உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவர் பொன்னவைக்கோ, வி.ஜி.பி. உலகத்தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் கூறியதாவது:உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் நடத்தும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் அடுத்த மாதம் 4 முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.இவற்றுடன் சிகாகோ தமிழ் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்பட உள்ளது.பழமையான தமிழ் நுால்களில் நிகழ்ந்த இடைச்செருகல்களை நீக்கி செம்பதிப்பாக வெளியிடுவது; தமிழ் மரபு கலைகளை உலகத்தரத்துக்கு உயர்த்துவது.தமிழ் சார்ந்த ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை பிரசுரிப்பது தமிழை கணினி மயமாக்குவது உள்ளிட்ட பணிகளை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வழியாக செயல்படுத்துகிறோம்.தமிழக அரசு இதற்கு நிதிஉதவி அளிப்பதுடன் ஆய்வாளர்களின் விசா தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும். தமிழனின் தொன்மையான வரலாறை கீழடி உள்ளிட்ட அகழாய்வு சான்றுகளின் வாயிலாக விளக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.மாநாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்; தொல்காப்பியத்தின் செம்பதிப்பு வெளியிடப்படும். தமிழக அரசின் சொற்குவை திட்டம் தொடங்கப்படும். ஆய்வுக்கட்டுரைகள் இணையத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X