பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கோயிலில் விசாரணை

Added : ஜூன் 25, 2019
Share
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின்வைப்பு நிதி 78 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதுகுறித்து மாவட்ட குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஊழியர்களின் வைப்பு நிதியை கடந்த மூன்றரை ஆண்டுகளாக வங்கியில் முழுவதும் செலுத்தாமல் 50 சதவீதம் செலுத்தி 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த கோயில் தற்காலிக ஊழியர் சிவன் அருள்குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனாவிடம், கோயில் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்தார்.

எஸ்.பி., உத்தரவுப்படி நேற்று மாவட்ட குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயா தலைமையில் போலீசார் ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் இ.பி.எப்., ஆவணம் பராமரிப்பு ஊழியரிடம் விசாரணை நடத்தி, கணினி பிரிவில் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை சேகரித்தனர். மேலும் பண மோசடியில் தொடர்புடைய சிவன்அருள்குமரனிடம் போலீசார் ஒரிரு தினத்தில் விசாரிக்க உள்ளனர்.

தற்காலிக ஊழியருக்கு அதிகாரம் : அதிக பண புழக்கம் உள்ள இ.பி.எப்., நிதியை ஆன்லைனில் வங்கியில் செலுத்த தற்காலிக ஊழியருக்கு அதிகாரம் கொடுத்தது ஏன். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்த இ.பி.எப்., முறைகேடு குறித்து கோயில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததன் மர்மம் என்ன, என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இச்சம்பவத்தில் பலருக்கும் தொடர்பு உள்ளதால், போலீசார் துரித விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சரவணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X