பொது செய்தி

தமிழ்நாடு

குருவன்குப்பத்தில் பூட்டி கிடக்கும் நுாலகம்

Added : ஜூன் 25, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:குருவன்குப்பத்தில் பூட்டிக் கிடக்கும் நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி ஊராட்சி குருவன்குப்பத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள், மாணவர்கள் நலன் கருதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் திறக்கப்பட்டது. ஒருசில மாதங்களே பயன்பாட்டில் இருந்த நுாலகம் எவ்வித முன் அறிவிப்புமின்றி பூட்டப்பட்டது.இதனால் மாணவர்கள் பொது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விலைமதிப்பில்லா புத்தகங்கள் கரையான்களுக்கு உணவாகும் அபாயம் உள்ளது.எனவே, மாணவர்கள் நலன் கருதி, பூட்டிக் கிடக்கும் நுலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X