பொது செய்தி

தமிழ்நாடு

'குழந்தையின்மை அதிகரிக்க காரணம் வாழ்க்கை முறை'

Added : ஜூன் 25, 2019
Advertisement

கோவை:பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் மகப்பேறின்மை சிகிச்சை துறை சார்பில், குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.பி.எஸ்.ஜி., மருத்துவமனை கருவியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவ துறை தலைவர் ஹேமாராஜேஷ் கூறியதாவது:குழந்தையின்மை பாதிப்புக்கு, வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. குறித்த நேரத்தில் துாக்கமின்மை, முறையற்ற உணவுப்பழக்கம், துரித உணவு, தாமத திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதில் காலதாமதம் உள்ளிட்ட காரணங்களால், குழந்தையின்மை பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உடல் பருமன் ஏற்படுவதாலும், இப்பாதிப்பு ஏற்படுகிறது. மது அருந்துதல், புகைபிடித்தல் முக்கிய காரணங்களாக உள்ளன. முறையான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X