தென்னிந்தியாவில் கிளைகளை துவக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னிந்தியாவில் கிளைகளை துவக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ்

Added : ஜூன் 25, 2019

மதுரை, கல்யாண் ஜுவல்லர்ஸ் தென்னிந்தியாவில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 8 கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளது.கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவர் டி.எஸ்.கல்யாணராமன் கூறியதாவது:ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவில் தலா இரண்டு, கேரளா, தெலுங்கானாவில் ஒரு கிளை அடங்கும். பாரம்பரியத்தை தக்கவைக்கும் வகையில் நாங்கள் '4 லெவல் அசூரன்ஸ்' சான்றிதழ் பெற்றுள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு துாய்மை, தரம், மறுவிற்பனை, பரிமாற்ற மதிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும். நகைகள் அனைத்தும் பரிசோதனைக்கு பின் பி.ஐ.எஸ்., ஹால்மார்க் முத்திரையிடப்படுகிறது.வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பாரம்பரிய, நவீன டிசைன்களில் தங்கம், வைரம், விலை மதிப்புள்ள கற்களை கொண்ட நகைகளை வடிவமைக்கிறோம். இந்தியா, மேற்கு ஆசியாவில் கிளைகளின் எண்ணிக்கை 137 ஆக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு தென்பகுதியில் கிளைகளை பலப்படுத்துவதே எங்கள் குறிக்கோள்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X