பொது செய்தி

தமிழ்நாடு

வெறும் கையோடு அனுப்புகின்றனர் போக்குவரத்து ஊழியர்கள் வேதனை

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருப்பூர், 'ஓய்வு பெறும் ஒவ்வொரு போக்குவரத்து தொழிலாளரையும் வெறும் கையோடு அரசு அனுப்பி வைக்கிறது' என மண்டல மாநாட்டில் ஓய்வூதியர்கள் வேதனை தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஐந்தாவது மண்டல மாநாடு திருப்பூரில் நேற்று நடந்தது. 3000 பேர் பங்கேற்றனர்.பொதுச் செயலர் கர்சன் பேசியதாவது:தமிழகத்தில் 80 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம் உட்பட பண பலன்களை 2018 ஏப். முதல் தமிழக அரசு வழங்கவில்லை.ஓய்வு பெறும் தொழிலாளரை வெறும் கையோடு அரசு அனுப்பி வைக்கிறது. பிற துறைகளுக்கு மாதத்தின் துவக்க நாளில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.போக்குவரத்து துறைக்கு மட்டும் 10ம் தேதி ஓய்வூதியம் தரப்படுகிறது. தொழிலாளி எந்த தேதியில் ஓய்வு பெற வேண்டும். ஓய்வு தொகை எப்போது வழங்க வேண்டும் என்பதை ஓய்வு பெறுபவர் முடிவு செய்வதில்லை; அரசு முடிவு செய்கிறது.இதற்கு ஜூலை 31க்குள் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிடில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Moorthy - Chennai,இந்தியா
26-ஜூன்-201909:57:47 IST Report Abuse
Krishna Moorthy போக்குவரத்து துறை மற்றும் ஊழியர்களும் வாடிக்கையாளர் அதாவது பயணிகள் சேவையில் கவனம் செலுத்த வில்லையென்றால் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை ஏற்பட வெகு காலம் பிடிக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X