கோவை:கோவையில், பார்வையற்ற மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.இது குறித்து, கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்ட அறிக்கை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் உலியம்பாளையத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில், முதல் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளியில் உணவு, உடை, உறைவிடம் அனைத்தும் இலவசம்.பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பிரெய்லி முறையில் கல்வியுடன் இசை, கணினி, யோகா, விளையாட்டு கற்பிக்கப்படுகிறது. எனவே, பார்வைத்திறன் குறைபாடு உடைய குழந்தைகளை, இந்த பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன் வர வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE