திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் பழங்கால இரட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழர் நாகரிகம், வணிக முறை குறித்து தமிழக தொல்லியல்துறை 5ம் கட்ட அகழாய்வை கீழடியில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார்.முருகேசன் என்பவரது நிலத்தில் பண்டைய கால நீண்ட சுவர் தென்பட்டது. பத்து அடி நீளம் கொண்ட முழுமையான சுவரும், அதில் பாதியளவு கொண்ட சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.சுவருக்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங்கல் அனைத்தும் உறுதியாக உள்ளது. இந்த சுவர் கட்டடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என கண்டறிய முடியவில்லை.சுவரை முழுமையாக தோண்டி பார்த்த பின் தான் இது கட்டடத்தின் எந்த பகுதி, எந்த வகையான கட்டடம், மனிதர்கள் வசித்துள்ளனரா என்பது தெரியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE