அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜ்யசபா, எம்.பி., தேர்தல்,போட்டி ,யார் யார்?, தி.மு.க., அ.தி.மு.க.,

தமிழகத்தில், அடுத்த மாதம் காலியாக உள்ள, ஆறு ராஜ்யசபா, எம்.பி., பதவிகளுக்கு, ஜூலை, 18ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் சம பலம் இருப்பதால், யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்ற விவாதம், இரு தரப்பிலும் துவங்கி உள்ளது. இதற்கிடையில், தி.மு.க., தயவில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கை, ராஜ்யசபாவுக்கு அனுப்ப, காங்கிரஸ் மேலிடம் திட்டமிடுகிறது. இதை, தி.மு.க., தலைமை விரும்பாததால்,இரு கட்சிகளின் கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, தற்போது, ராஜ்யசபா,எம்.பி.,க்களாக உள்ள, அ.தி.மு.க.,வை சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவி காலம், ஜூலை, 24ல் நிறைவடைகிறது. அதேபோல, தி.மு.க.,வை சேர்ந்த கனிமொழி, லோக்சபா, எம்.பி., யானதால், அவர் வகித்து வந்த, ராஜ்யசபா, எம்.பி., பதவியை ராஜினாமா செய்துள்ளார்; அந்த இடமும் காலியாக உள்ளது. எனவே, புதிதாக, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.



ஜூலை, 1ல், வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. மனு தாக்கல் செய்ய, ஜூலை, 8 கடைசி நாள்.மறுநாள், வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை வாபஸ் பெற, ஜூலை, 11 கடைசி நாள்.போட்டி இருந்தால், ஜூலை, 18ல் தேர்தல் நடக்கும். காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கும். மாலை, 5:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒரு ராஜ்யசபா,எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.

தற்போதுள்ள, எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில், அ.தி.மு.க., விற்கு, மூன்று, தி.மு.க.,விற்கு, மூன்று, எம்.பி.,க்கள் கிடைக்கும். எனவே, போட்டியின்றி, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பே அதிகம்உள்ளது.



அ.தி.மு.க.,வில் போட்டி


அ.தி.மு.க., சார்பில், மூன்று, எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதில் ஒன்றை, பா.ம.க.,விற்கு தருவதாக, கட்சி தலைமை உறுதி அளித்துள்ளது. மீதமுள்ள, இரண்டு இடங்களுக்கு, கட்சியில் கடும் போட்டி நிலவுகிறது.லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர், தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள், கோகுலஇந்திரா, கே.பி.முனுசாமி, முன்னாள், எம்.பி.,க்கள், மனோஜ் பாண்டியன், அன்வர்ராஜா, ரபி பெர்னார்ட், தற்போதைய எம்.பி., மைத்ரேயன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ்மகன் உசேன் உட்பட, பலர் வாய்ப்பு கேட்டுள்ளனர்.


இவர்களில், யாருக்கு வாய்ப்பு வழங்குவது என தெரியாமல், தலைமை தடுமாறி வருகிறது. இதற்கிடையில், பா.ம.க.,வுக்கு பதவி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையும், கட்சியில் வலுத்துள்ளது. முதல்வர் தரப்பும், துணை முதல்வர் தரப்பும், தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி பெற்றுத் தருவதில் மும்முரம் காட்டுவதால், கடும் போட்டி காணப்படுகிறது.

தி.மு.க., முடிவு


தி.மு.க., தரப்பில், வேட்பாளர்களை முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தி.மு.க., தொழிற்சங்க பேரவை செயலர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் நிறுத்தப்படுவர் என, தகவல் வெளியாகி உள்ளது.இதற்கிடையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க, காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது.

தமிழகத்தில், தி.மு.க., ஆதரவில், அவரை தேர்ந்தெடுக்க நினைக்கிறது. இது குறித்து, தி.மு.க., விடம் பேசப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., தலைமை, இதில் எந்த முடிவும் எடுக்காமல், மவுனம் சாதித்து வருவதால், மன்மோகன்சிங், எம்.பி., ஆவாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
27-ஜூன்-201911:22:37 IST Report Abuse

karutthuசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடத்தில சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா .......... வஞ்சகன் ???

Rate this:
Girija - Chennai,இந்தியா
26-ஜூன்-201920:40:17 IST Report Abuse

Girijaகம்பி துரை யால் பார்லிமென்டில் தேர்தலில் தலைகுப்புற கவிழ்ந்தது ஆகவே அவருக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து பாக்கி மண்ணையும் தலையில் வாரி போட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் கோகுலஇந்திரா, மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், தேவலை

Rate this:
bal - chennai,இந்தியா
26-ஜூன்-201920:36:28 IST Report Abuse

balபிரதமராக இருந்தபோதே அஸ்ஸாமில் இருந்து வந்தவர் மன்மோகன்....இப்போ என்ன சாதிக்கப் போறார்...இளையவர்களுக்கு கொடுங்க..

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X