பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி அமைச்சர்கள் செலவு விவகாரம் விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

Added : ஜூன் 25, 2019
Advertisement

புதுச்சேரி, புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அரசு சார்பு நிறுவனங்களின் நிதியை செலவு செய்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி அமைச்சர்களின் அலுவலக செலவுகளுக்கு அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளின் பணம் முறைகேடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ராஜிவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இதில் வருவாய் மற்றும் சமூகநல துறை அமைச்சர் அலுவலகங்களுக்கு அரசு நிறுவனங்களிடம் பல லட்சம் ரூபாயில் பொருட்கள் வாங்கியது தெரிந்தது.இதையடுத்து புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலகங்களில் விதிமுறைளை மீறி அரசுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் நிதி செலவு செய்யப்படுவதாக கவர்னர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி தலைமை செயலர் ஆகியோருக்கு ஆதாரங்களுடன் ரகுபதி மனு அனுப்பியிருந்தார்.இந்நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:அமைச்சர்கள் அலுவலக செலவு விவகாரம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி உதவி புரிந்தவர்களும் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கவர்னர் அதிகாரம் தொடர்பான பரபரப்பு முடிவதற்குள் தற்போது அமைச்சரவை செலவு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X