எதிர்பார்த்ததோ தினசரி...அறிவிப்போ நான்கு நாள் ஏமாற்றம் தந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்பார்த்ததோ தினசரி...அறிவிப்போ நான்கு நாள் ஏமாற்றம் தந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில்

Added : ஜூன் 25, 2019 | கருத்துகள் (1)

ஸ்ரீவில்லிபுத்துார், தினசரி ரயிலாக மாற்றப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலை மேலும் ஒரு மாதம் நீடித்து ரயில்வே அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா, எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமை தோறும் காலை 11:00 மணிக்கு புறப்படும் இந்த ரயில், புனலுார், தென்மலை, செங்கோட்டை, சிவகாசி, விருதுநகர், அருப்புகோட்டை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், நாகபட்டினம் வழியாக காலை 7:00 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறு மாலை 6:15மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12:30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.கடந்த ஏப்ரல் முதல் இயங்கும் இந்த ரயில் தமிழகம் மற்றும் கேரள மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. காத்திருப்போர் பட்டியல் நிலையிலேயே முன்பதிவுகள் உள்ளன. இதனால் இந்த ரயில் தினசரி ரயிலாக மாற்றப்படும் என பயணிகள் எதிர்பார்த்தனர்.ஆனால் தொடர்ந்து வாராந்திர ரயிலாக ஜூலை மாதத்திற்கும் நீட்டித்து ரயில்வே அறிவித்துள்ளது.தலைநகரங்களில் நிற்காத ரயில்
கேரளாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நின்று செல்லும் இந்த ரயில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, முக்கிய நகரங்களான கடையநல்லுார், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், திருத்தங்கல், திருச்சுழி, கல்லல், தேவகோட்டை, செட்டிநாடு, திருமயம் ஆகிய முக்கிய நகரங்களில் நிறுத்தப்படவில்லை.கேரள கோட்டத்தின் கீழ் இயக்கப்பட்டால் அவர்களுக்கு இங்குள்ள முக்கிய நகரங்கள் தெரியாது எனலாம். ஆனால் இந்த ரயில் மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் கீழ் தான் இயக்கப்படுகிறது. எனவே,அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த ரயில் நின்று செல்ல மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X