பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கலாம்: தோட்டக்கலைத்துறை யோசனை

Added : ஜூன் 25, 2019
Advertisement

உடுமலை;வெங்காய சேமிப்புக்கிடங்கு மற்றும் சிப்பம் கட்டும் அறை அமைக்க, விருப்பமுள்ள குடிமங்கலம் வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.மத்திய, மாநில அரசுகள் சார்பில், தோட்டக்கலைத்துறையின் கீழ், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், சொட்டு நீர் பாசன மானிய திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களின் கீழ் குடிமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு நடப்பாண்டுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா அறிக்கை:இந்தாண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், காய்கறி சாகுபடி, மா, மிளகாய் போன்ற சாகுபடிகளுக்கு, மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பறவை தடுப்பு வலை அமைத்தல், வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.பீட்ரூட் சாகுபடிக்கும், மானியம் வழங்கப்பட உள்ளது. திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், தக்க ஆவணங்களுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.நீர் பற்றாக்குறையை சமாளித்து, சாகுபடி செய்ய, சொட்டு நீர் பாசன மானிய திட்டம், அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிமங்கலம் வட்டாரத்துக்கு, சொட்டு நீர் பாசனம் அமைக்க, 204.06 லட்ச ரூபாய், ஒதுக்கீடு செய்யப்பட்டு, 330 எக்டேர் அளவுக்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், 1800 4254 444 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, அதிகபட்சமாக, 40 ஆயிரம் ரூபாய், இதர விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு அதிகபட்சமாக, 35 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும்.இதற்கான முகாம்கள் கிராமங்களில் நடக்கிறது. மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்புவோர், சிட்டா, அடங்கல், நிலவரைபடம் ஆகியவற்றுடன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் 9486148557, தோட்டக்கலை அலுவலர் 9865075473 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரை 9159418909 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X