நெட்டப்பாக்கம்:நெட்டப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த பவித்ரராஜகுளத்தை நேற்று அதிகாரிகள் அதிரடியாக மீட்டு சீரமைத்தனர்.
நெட்டப்பாக்கம் சாராயக்கடை பின்புறம், விளை நிலங்களுக்கு மத்தியில், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பவித்ரராஜகுளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து கடந்த 30 ஆண்டுகளாக பயிரிட்டு வந்தார்.இந்நிலையில், கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, பாகூர் தாசில்தார் குமரன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகர் தலைமையில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன், குளத்தில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வாரி சீரமைத்தனர்.