சென்னை: ''அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் மற்றும் மாவட்ட செயலர் பதவியில் இருந்து, தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவார்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:தங்கதமிழ்செல்வன், கடந்த வாரம், ரேடியோவில் பேட்டி கொடுத்தார். இது குறித்து, நிர்வாகிகள் புகார் செய்தனர். அவரை, 20ம் தேதி வரவழைத்து, 'வாய்க்கு வந்தபடி ஏன் பேசுகிறீர்கள்' என, கேட்டேன்; விளக்கம் அளித்தார்.
அவரிடம், 'பதில் கூற தெரியாவிட்டால், பேட்டிக்கு போக வேண்டாம்' என்றேன். 'இனி மேல் பேட்டி கொடுத்தால், ஒழுங்காக கொடுங்கள். இல்லையென்றால், கொள்கை பரப்பு செயலர் மற்றும் மாவட்ட செயலர் பதவிக்கு, வேறு ஆளை நியமிக்க வேண்டிய நிலை வரும்' என, எச்சரித்தேன்.
கட்சியை பதிவு செய்யும் வேலை நடக்கிறது. விரைவில், தலைமை நிர்வாகிகளை அறிவிப்போம். முதன்முதலாக நீக்கல் அறிவிப்பு வெளியிட வேண் டாம் என நினைத்ததால், தங்கதமிழ் செல்வனை நீக்கவில்லை.வரும் மாதத்தில், தலைமை நிர்வாகி கள் பட்டியலை வெளியிடுவோம். தங்கதமிழ் செல்வன் விஸ்வரூபம் எடுக்க மாட்டார். என்னை பார்த்தால், பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்.
போனில் அவர், எங்கள் கட்சியை சேர்ந்த, தொழிற்சங்க நிர்வாகி செல்லப்பாண்டியனிடம் பேசி
உள்ளார்.தங்கதமிழ்செல்வன் செயல்பாடு சரியில்லை என, மே, 31ல், நிர்வாகிகள் கூட்டத்தில் புகார் கூறினர். அதனால், வேறு மாவட்ட செயலரை தேர்வு செய்ய முடிவு செய்தோம்.இனி, அவரிடம் விளக்கம் கேட்க மாட்டோம்.
எனக்கு அறிவுரை கூற, அவர் யார்; முடிவெடுத்த பின், எதையாவது கூறுவார். என்னை தாக்கி பேசும்படி, யாரோ அவரிடம் கூறியுள்ளனர். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது, உங்களுக்கு விரைவில் தெரியும்.இனிமேலும், அவர் கட்சியில் இருந்தால், எனக்கு அசிங்கம்.இவ்வாறு, தினகரன் கூறினார்.
தினகரன் கூடாரம் காலியானது ஏன்?
அ.தி.மு.க.,வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற, கட்சியை துவக்கினார்.
அ.தி.மு.க.,வில் பதவி கிடைக்காதவர்கள், அவர் பின் சென்றனர். அவருக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக நம்பினர்.லோக்சபா தேர்தல் மற்றும்சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், அ.ம.மு.க., போட்டியிட்டது. அனைத்து வேட்பாளர்களும், படுதோல்வியை சந்தித்தனர்.
அ.தி.மு.க.,தொண்டர்கள்,இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தலைமையில் செயல்படும், அ.தி.மு.க., பக்கம் இருப்பதை, தேர்தல் முடிவு உறுதி செய்தது. தோல்வியை தொடர்ந்து, அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகள்,அ.தி.மு.க.,விற்கு தாவி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாகவே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள், எம்.எல்.ஏ., கலைராஜன் ஆகியோர், தி.மு.க.,விற்கு சென்றனர்.
தேர்தலுக்கு பின், திருநெல்வேலி மாவட்ட செயலர், அமைப்பு செயலர் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள்,அ.தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். தற்போது, கொள்கை பரப்பு செயலரான, தங்கதமிழ்செல்வனும், வெளியேற உள்ளார்.இனியும் தினகரனை நம்பினால், அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதை உணர்ந்து, நிர்வாகிகள் ஓட்டமெடுத்து வருகின்றனர்.
மேலும், தினகரனின் ஆணவ பேச்சு காரண மாகவே, முக்கிய நிர்வாகிகள், வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில், 'கட்சியிலிருந்து வெளியே செல்ல விரும்புவோர், தாராளமான செல்லலாம்' என, தினகரன் கூறி வருகிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (21)
Reply
Reply
Reply