பொது செய்தி

இந்தியா

தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை கைவிட கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2019
Advertisement
 தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை கைவிட கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி:தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை - 2019, முழுமையாக கைவிட வேண்டும் என கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை 2019 குறித்து விவாதித்து, அதன் மீதான விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் 16 அமைப்புகள் இணைந்து 'கல்வி பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில், புதுச்சேரி அரசு ஊழியர்கள் சம்மேளன அலுவலக கருத்தரங்க கூடத்தில், தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை 2019, குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. கருத்தரங்கிற்கு, புதுச்சேரி மாநில பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். பொதுபள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்வியாளர் மாதவன், தமிழ்நாடு புதுச்சேரி பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேசிய வரைவு கல்வி கொள்கை 2019 குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், ஆசிரியர்கள் சங்கம், அரசு ஊழியர்கள் சம்மேளனம், புதுச்சேரி அறிவியல் இயக்கம், ேஹாப், இந்திய மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கல்வியாளர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.கருத்தரங்கில், தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை 2019, குறித்த விவாதமும், விமர்சனமும் செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை 2019 முழுமையாக கைவிட வேண்டும். கல்வி கொள்கை அறிக்கை தொடர்பான கருத்துக்களை பகிர ஜூன் 30 என்பது போதுமான கால அவகாசம் இல்லை. எனவே காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். தேசிய வரைவு கல்வி கொள்கை அறிக்கை 2019, மாநில மொழிகளில் பகிரப்படுதல் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X