பொது செய்தி

இந்தியா

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

Added : ஜூன் 26, 2019
Advertisement
 கண்ணதாசன் பிறந்த நாள் விழா

புதுச்சேரி:கவியரசு கண்ணதாசனின் 92வது பிறந்த நாள் விழா, புதுச்சேரி ஜெயராம் ஓட்டலில் நடந்தது.
கவியரசு கண்ணதாசன் இலக்கிய கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு, துணை தலைவர் கோதண்டராமன் வரவேற்றார். தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார். இலக்கிய கழக நிர்வாகிகள் செந்தில்குமார், காண்டீபன், கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிறுவனர் கோவிந்தராசு தொடக்க உரையாற்றினார். செயலர் சீனு மோகன்தாசு அறிமுக உரையாற்றினார். சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணனுக்கு 'கண்ணதாசன் விருதும்', தொழிலதிபர் அருள்செல்வம், மதுரை வீரட்டீசுவரன், பாலவர் சம்பூர்ணம் நரேஷ் ஆகியோருக்கு தமிழ் பணி செம்மல் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., முனைவர் ரத்தின வேங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நகைச்சுவை நாவலர் புலவர் ராமலிங்கம் 'காலத்தை வென்றவன்' என்ற தலைப்பில் பேசினார். கலைவாணி பாண்டியன், கலைவாணி சதீஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர். முன்னதாக அபிேஷகப்பாக்கம் தட்சிணாமூர்த்தி குழுவினரின் மங்கல இசையும், மாணவி இளவேனியின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. உறுப்பினர் மதன்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X