பொது செய்தி

இந்தியா

வாராக் கடன்களை வசூலிக்க சிறப்பு முகாம்

Added : ஜூன் 26, 2019
Advertisement

புதுச்சேரி:வாராக்கடன்களை வசூலிக்க வார விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்த பாட்கோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து பாட்கோ மேலாண் இயக்குனர் ரகுநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி பாட்கோ மூலமாக காலக்கடன், சிறு தொழில் கடன் மற்றும் கல்வி கடன் போன்ற திட்டங்களின் கீழ் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்திட அறிவுறுத்தி பல்வேறு வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாட்கோ அலுவலர்கள் மூலமாக வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தீவிர வசூல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, வரும் 29ம் தேதி தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை வளாகத்திலும், 30ம் தேதி உழவர்கரை நகராட்சி அலுவலக வளாகம், வரும் ஜூலை 6 ம் தேதி வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து வளாகம், 7 ம் தேதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வளாகம்,13ம் தேதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வளாகம், 14ம் தேதி நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வளாகம், 20ம் தேதி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தீவிர வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.எனவே, பயனாளிகள் இம்முகாம்களின் வாயிலாக, தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தி, மற்ற பயனாளிகள் பயனடைய வாய்ப்பினை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X