அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொங்கலுக்கு ரூ.2,000 கோடி இனாம் :
புதிய திட்டங்களுக்கு நிதியின்றி தவிப்பு

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக வழங்கிய, ரூ.1,000 ரொக்கத்தால், தற்போது, புதிய திட்டங்களை அறிவிக்க நிதியின்றி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை தவித்து வருகிறது.

பொங்கல், இனாம், புதிய திட்டங்கள், நிதி, தவிப்புதமிழக அரசின், உணவு துறையின் கீழ், உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனம் போன்றவை செயல்படுகின்றன.பெட்ரோல் பங்க்ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் பணியை, உணவு வழங்கல் துறையும்; ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதை, நுகர்பொருள் வாணிப கழகமும்

மேற்கொள்கின்றன. கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும், கூட்டுறவு சங்கங்கள் சார்பில், பல்பொருள் அங்காடி, ரேஷன் கடைகள், பெட்ரோல் பங்க் போன்றவை நடத்தப்படுகின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு,முதல் முறையாக, பொங்கலுக்கு, ரேஷன்கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பொருட்களுடன்,ரூ.1,000 ரொக்கத்தை, தமிழக அரசு வழங்கியது. அதனால், பொங்கல் பொருட்களுக்கு, 258 கோடி ரூபாய்; ரொக்க பணத்திற்கு, 2,020 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.வாடகை கட்டடம்உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள், இடவசதியின்றி, வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. சேமிப்பு கிடங்கு நிறுவனம் மற்றும் வாணிப கழகத்திற்குசொந்தமான, பல கிடங்குகள் சேதம் அடைந்துள்ளன.போதிய நிதி இல்லாததால், கிடங்குகளை

Advertisement

சீரமைக்கவும்; ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டவும் முடியாத நிலை உள்ளது. ஆண்டுதோறும், உணவு மானியத்திற்கு, 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தேர்தலை மனதில் வைத்து, 2.02 கோடி கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கியதற்காக மட்டும், 2,278 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட பட்டு உள்ளது. சட்டசபையில்,கூட்டுறவு உணவு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், ஜூலை, 3ல் நடக்கிறது. அப்போது, துறை தொடர்பான, புதிய திட்ட அறிவிப்புகளை வெளி யிட, அதிகாரிகள் நிதியின்றி தவிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mal - Madurai,இந்தியா
26-ஜூன்-201920:28:26 IST Report Abuse

MalScrap all free schemes... Treat government money as god's own money and sp with care... Don't misuse funds ... For every penny you sp(government money) lavishly god will punish you later. Bring in appraisals for all government servants... Those who work should get good salary .... You might give a lot of salary for the undeserving people and they too might use it without thought but we will have to suffer in future. So it's better government regularised Salary based on performance... Only a farmer who works sincerely gets the deserved harvest but all government servants get equal money whether they work or not...

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
26-ஜூன்-201914:07:40 IST Report Abuse

pattikkaattaan என்றைக்கு இலவசம் கொண்டுவந்தார்களோ அன்றைக்கே தமிழ்நாட்டுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டது.. இதுல கொடுமை என்னவென்றால் இதைப்பார்த்து மற்ற மாநிலங்களும் காப்பி அடித்ததுதான்.. கல்வி , மருத்துவம் தவிர எதுவும் இலவசம் கூடாது .. முதியவர்களுக்கு இலவசம் தரலாம் .. மற்ற திட்டங்கள் எல்லாம் துடைத்தெறியப்பட்டு , அந்த நிதியில் உண்மையாக நாடு முன்னேற நீர் நிலைகளை கட்டமைக்கவேண்டும், புதிய தொழில்களை ஊக்குவிக்கவேண்டும் .. குறிப்பாக மக்களுக்கு "உழைத்து வாழ வேண்டும் , பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே " என்ற எண்ணம் வேண்டும் .. "பொங்கலுக்கு நீ 1000 ரூபாய் வாங்கவில்லையா?" என்று யாராவது என்னை கேட்கலாம் .. நாங்கள் வாங்காவிட்டால் அதை சுருட்ட அங்கேயே ஆளும்கட்சி ஆட்கள் அமர்ந்திருந்தனர் .. எனவே அதை வாங்கி முதியோர் இல்லத்திற்கு கொடுத்தோம் .. தவறில்லையே? ..

Rate this:
26-ஜூன்-201911:59:44 IST Report Abuse

ஆப்புவிதி 110 இன் கீழ் நிதி ஒதுக்கலாமே...கோடி கோடியாய் செலவு செய்யலாமே.... ஓ.. அதெல்லாம் ஓட்டுக்கு காசு குடுக்கத்தான் பயன் படுத்தணும் போல.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X