பொது செய்தி

இந்தியா

காரைக்காலில் குடிநீர் பஞ்சம்: தி.மு.க., கோரிக்கை

Added : ஜூன் 26, 2019
Advertisement

காரைக்கால்:காரைக்காலில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கிட அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க., அமைப்பாளர் நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:காரைக்கால் மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் மக்கள் குடிநீர் கேட்டு போராடி வருகின்றனர்.தெற்கு தொகுதியில் நடுஓடுதுறை பகுதியில் அடிக்கடி தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, பல பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு அமைத்தேன். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் அந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்த தண்ணீர் எடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X