பொது செய்தி

இந்தியா

காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் வழிகாட்டி கருத்தரங்கம்

Added : ஜூன் 26, 2019
Advertisement
 காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் வழிகாட்டி கருத்தரங்கம்

புதுச்சேரி:காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், மாணவ தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது.
சமுதாயத்தில் பின்தங்கிய பள்ளி மாணவிகளின் மனநிலையை அறிந்து, அவர்களை மேம்படுத்துவதற்காக, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், அரசு பப்ளிக் சாரிட்பிள் டிரஸ்ட் மூலம் பதிவு செய்யப்பட்ட அவத்தார் யூமன் கேபிட்டல் டிரஸ்டுடன் இணைந்து கருத்தரங்கை நடத்தியது.கல்லுாரி முதல்வர் அறவாழி இருசப்பன் துவக்கி வைத்தார். இந்த வழிகாட்டி கருத்தரங்கம், மாணவ தன்னார்வலர்களை சிறந்த முறையில் பயிற்றுவித்து, அவர்களை மகளிர் மேம்பாட்டிற்காக பங்காற்றுவதற்காக நடத்தப்பட்டது.இண்டக்ரா உள்ளிட்ட பல நிறுவனங்கள், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதி தன்னார்வலர்கள் பங்கு பெற்றனர். பயிற்சி நிறைவில் வழிகாட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை ஈஸ்வர் பாலா தொகுத்து வழங்கினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய மாணவ மாணவியர் 42 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளராக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜோசப்பின் அருணா செயல்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X