பொது செய்தி

தமிழ்நாடு

காணாமல் போகும் கவுசிகா நதி: நிலத்தடி நீருக்கு பெரும் பாதிப்பு

Added : ஜூன் 26, 2019
Advertisement

விருதுநகர் : கழிவுநீர் கலப்பதாலும், ஆக்கிரமிப்பாலும் கவுசிகா நதியானது சுருங்கி வருகிறது. வருங்காலங்களில் இப்படி ஒரு நதி இருந்ததா என கேட்கும் அளவில் இந்நதியின் நிலை உள்ளது.இதை கண்காணிக்காமல் விட்டதால் நிலத்தடிநீருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கவுசிகா நதி விருதுநகரின் முக்கிய நதி ஆகும்.

வடமலைக்குறிச்சி கண்மாயில் இருந்து வெளியேறும் நீர் சின்னமூப்பன்பட்டி, பாப்பாக்குடி, மீனாட்சிபுரம், பாவாலி, பராசக்தி நகர், அய்யனார் நகர், விருதுநகர் அகமது நகர், பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், பாத்திமா நகர், அல்லம்பட்டி, ஆத்துமேடு குடியிருப்பு பகுதிகளை கடந்து ஓடுகிறது. தற்போது ஆக்கிரமிப்பால் கவுசிகா நதி இருந்த இடம் தெரியாமல் மாயமாகும் நிலை வெகு விரைவில் என்றே சொல்லலாம்.. நதி வரும் கிராமங்களில் விவசாய நிலங்களுக்கும் முக்கிய நீராதாரமாக உள்ள இதில் சீமை கருவேலமரங்கள் படர்ந்து ஆற்றின் வழித்தடத்தையே பழாக்கிவிட்டது.

விருதுநகர் நகராட்சியில் முழுமை பெறாத பாதாளசாக்கடை திட்டத்தால் 19 ஆயிரம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கவுசிகா நதியில்தான் கலக்கிறது. கடந்த 2015ல் கவுசிகா ஆற்றை துார்வார முன்னாள் விருதுநகர் எம்.எல்.ஏ., பாண்டியராஜன் ரூ.3 கோடி ஒதுக்கினார். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றாது,முறையாக துார்வாராது, ஆற்றின் ஓரத்தில் இருந்த முட்செடிகளை மட்டும் வெட்டி கணக்கு காட்டினர்.இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் ஸ்வாக செய்யப்பட்டது.

அதிகாரிகள் சுயநலத்தால் ஆற்றில் கருவேல மரங்கள் வளர்ந்து புதராகி காட்சி அளிக்கிறது. கிடைத்த நிதி கொண்டு துார்வாரி போதிய தடுப்பணை கட்டி இருந்தால் நிலத்தடிநீருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். மழைநேரங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து குடிநீருக்காவது பயன்படுத்தியிருக்கலாம்.துர்நாற்றம் தாங்கலகவுசிகா நதி என்பது போய் கவுசிகா சாக்கடை என்றாகி விட்டது. கவுசிகா நதி அருகே குடியிருக்கும் பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், பாத்திமா நகர், ஆத்துமேடு பகுதி மக்கள் கவுசிகா நதியில் ஓடும் கழிவுநீரின் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படும் பொதுப்பணித் துறை விரைந்து துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்டவர், கூலித்தொழிலாளி, விருதுநகர்.அன்று மகாநதி இன்று ஓடைஅக்காலத்தில் கவுசிகாநதியானது மகாநதி என அழைக்கப்பட்டது. பெரிய கரைகளையும், நீண்ட வழித்தடத்தையும் கொண்டிருந்த கவுசிகாநதி நாளடைவில் சுருங்கி தற்போது ஓடையை போல் காட்சி அளிக்கிறது. வெறும் கழிவுநீர் மட்டுமே ஓடுகிறது. மழைநேரங்களில் பெய்யும் மழை சேகரமாக வழியின்றி கழிவுநீர் தேக்கமாக மாறி உள்ள குல்லுார்சந்தை அணையிலே மீண்டும் கலக்கிறது.

இதற்கு ஓர் வழி காண பொதுப்பணித்துறை முன் வர வேண்டும்.மகேஸ்வரன், தனியார் ஊழியர், விருதுநகர். இதை செய்யலாமேசிவஞானபுரம், பாவாலி ஊராட்சிகளை உள்ளடக்கிய வடமலைக்குறிச்சி, பராசக்திநகர், சின்னமூப்பன்பட்டி, பாப்பாக்குடி பகுதிகளில் உள்ள நுாறு நாள் வேலை திட்டத்தில் செயல்படும் மக்களை பயன்படுத்தி கவுசிகா நதியின் வழித்தடத்தை துார்வாரலாம். இதன் மூலம் கவுசிகா நதியும் மீண்டும் உருவாகும். மேலும் கிராமத்தினருக்கும் வேலை கிடைக்கும் .நாராயணசாமி, விவசாயிகள் சங்க தலைவர், விருதுநகர்வாழ வழி செய்யுங்க ஒவ்வொரு ஆண்டும் மழை பொய்த்து கொண்டே வருகிறது.

கவுசிகா நதியை சுற்றிய கிராமங்களில் மிளகாய், பருத்தி போன்ற மானாவாரி பயிர்கள் தான் பயிரிடப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சும் சீமை கருவேலமரங்கள் தான் கவுசிகாவின் வழித்தடத்தில் உள்ளது. கவுசிகாவை மீட்டு நீராதாரத்தை பெருக்கி விவசாயிகள் வாழ வழிவகை செய்ய வேண்டும்.பாஸ்கரன், விவசாயி, விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X