பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் மலேரியாவை தடுக்க விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் மலேரியாவை தடுக்க விழிப்புணர்வு

Added : ஜூன் 26, 2019
 பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் மலேரியாவை தடுக்க விழிப்புணர்வு

புதுச்சேரி:பொம்மலாட்டா நிகழ்ச்சி மூலம், பள்ளி மாணவர்களுக்கு மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குயவர்பாளயைம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியல் நடந்தது. சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் வரவேற்றார். மருத்துவ அதிகாரி நிர்மல் குமார் தலைமை தாங்கினார். ஹோமியோபதி டாக்டர் உளஸ், பள்ளி துணை முதல்வர் சித்ரா, சுகாதார ஆய்வாளர் யசோதா முன்னிலை வகித்தனர். தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட மாநில திட்ட அதிகாரி சுந்தர்ராஜன் மற்றும் மலேரியா உதவி இயக்குனர் கணேசன் ஆகியோர், மலேரிய நோய்க்கான அறிகுறிகள், பரிசோதனைகள், தடுப்பு முறைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினர். தொழில்நுட்ப உதவியாளர் (மலேரியா) செந்தில்வேலன், 2020 க்குள மலேரியா ஒழிப்பில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விவரித்தார்.நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தன்னம்பிக்கை கலைக்குழுவின் நிறுவனர் எலிசபெத் ராணி தலைமையிலான கலைக்குழுவினர், ஜோசப் ஆண்டனி மற்றும் சாலை மாரியம்மாள்ஆகயோரின் மலேரியா விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், வெங்கட்ராமன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் மாணவிகள் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X