பொது செய்தி

இந்தியா

அரசு தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஜூன் 26, 2019
Advertisement
 அரசு தொடக்க பள்ளியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி:முத்தியால்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், காட்டாமணிக்குப்பத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழாவில் தலைமை ஆசிரியர் ஆஷா வரவேற்றார். வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டத்தின் மாநில திட்ட இயக்குனர் சுந்தர்ராஜ், உதவி இயக்குனர் (மலேரியா) கணேசன், முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அதிகாரி புவனேஸ்வரி ஆகியோர் மலேரியா நோய் வருவதற்கான காரணங்களையும், அவற்றை தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்கி கூறினர்.மலேரியா விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வையாபுரி மணிகண்டன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X