பொது செய்தி

இந்தியா

ஜூனியர் தடகள போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஜூன் 26, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி தடகள சங்கம் சார்பில் 33வது ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் தடகளப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
இதுகுறித்து, சங்க செயலர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி தடகள சங்கம் சார்பில் 33வது ஜூனியர் மற்றும் சப் ஜூனியர்களுக்கான தடகளப் போட்டிகள் வரும் 7 ம் தேதி, காலை 7:30 மணிக்கு உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில், 8, 10, 12 மற்றும் 19 வயத்திற்குட்பட்ட பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 50 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு ஏறிதல், உயரம் தாண்டுதல், வட்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி- கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட வயது நிரம்பியவர்கள் கலந்து கொள்ளலாம்.இதற்கான விண்ணப்பங்களை, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் உள்ள சங்க நிர்வாகிகளிடம் பெற்று வரும் 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு செயலர் கோவிந்தசாமி- 94432 93193, பயிற்சியாளர் ராமலிங்கம்- 99442 39323, உடற்கல்வி ஆசிரியர் ரகுராமன்-99521 24654 ஆகியோர் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X